உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது: சித்தராமையா

ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது: சித்தராமையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய, காவிரி நீரை வழங்க உத்தரவிடும்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது. இம்மாதம் இறுதி வரை, தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி, உத்தரவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடும் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் விடுவிப்பது குறித்து கர்நாடகா மாநிலத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார், எதிர்கட்சி தலைவர் அசோக், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த படி தண்ணீரை திறந்து விட முடியாது. தினசரி 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடியும். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணயத்தில் மேல் முறையீடு செய்யவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 11500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

RaajaRaja Cholan
ஜூலை 17, 2024 11:24

தத்தி ஒரு டி எம் சி தண்ணி திறந்து விட முடியாது என்றால் பரவாயில்லை ரெண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுங்க


Indhuindian
ஜூலை 17, 2024 06:44

தி மு க - காங்கிரஸ் பாய் பாய் நகமும் சதையும் போல் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் கூட்டணியை முறிக்க யாராலும் முடியாது. ஆனா காங்கிரஸ் தி மு க வை மிரட்டிக்கொண்டே இருப்பார்கள் ஏன் என்றல் அவங்க இல்லாம தி மு க ஜெயிக்க முடியாது காங்கிரஸ் எப்படியும் ஆட்சிக்கு வரமுடியாது இருக்கற கொஞ்சம் எம் பி, எம் எல் ஏ களையெல்லாம் அவங்க போட்டது அதனால இப்படியே மிரட்டியே சாதிச்சிக்கலாம் எந்த காலத்திலும் தி மு க காங்கிரெஸ்ஸெய் எதிர்க்காது டெல்டா விவசாயிகள் பத்தி கவலையே இல்லேய்


Senthil Senthilpainter
ஜூலை 17, 2024 02:40

Quick anser


Godyes
ஜூலை 16, 2024 19:51

ஆறு என்பது மழை வெள்ளத்தால் இயற்கையாக தோன்றியது.அது நாட்டின் பொது சொத்து. கர்நாடகா எல்லை முடியும் ஆற்று பகுதியில் ஆழ் துளை கிணறுகளை போட்டு கரநாடாகா எல்லைக்குள் உள்ள ஆற்று நீரை உறிஞ்சி எடுத்து தமிழ் நாட்டு ஏரிகளுக்கு அனுப்பினால் சித்தராமையா என்ன கிழிப்பார்.


Godyes
ஜூலை 16, 2024 19:44

தண்ணி குடுக்கலேன்னா கர்நாடகாவுக்கு தமிழரும் தமிழ்நாட்டுக்கு கர்நாடாகாவினரூம் ரயில் விமானம் பேருந்துகளில் போவதும் வருவதையும் நிறுத்த வேண்டும்.


sundarsvpr
ஜூலை 16, 2024 16:38

முப்பத்தியொன்பதுக்கு முப்பத்தியொன்பது பெரும் தி மு க காவேரி பிரச்சனையை சரியாய் கண்டுகொள்ளவில்லை என்று எப்படி கூறமுடியும்.? காவேரி பிரச்னை மக்கள் ஒரு பொருட்டாய் கருதாத வரை இது தி மு க பிரச்னை இல்லை.


Sampath Kumar
ஜூலை 16, 2024 09:33

எத்தனை தடவை சொல்லுவீங்க ஒன்னு செய்யுங்க தண்ணீர் நீக்க வைத்து கொள்ளுங்கள் உங்க ஆணை உடைத்து தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் வந்தால் ஒரு சொட்டுகூடவர் கூடாது


Satish NMoorthy
ஜூலை 15, 2024 19:56

DMK again got stabbed in the back by partnering with Congress. Well done DMK


venugopal s
ஜூலை 15, 2024 17:26

பெற்றோர் சரியில்லை என்றால் பிள்ளைகள் தறுதலைகளாக இருக்கும். அது மத்திய மாநில அரசுகளுக்கும் பொருந்தும்!


Gokul Krishnan
ஜூலை 16, 2024 16:03

யாருக்கு பொருந்துமோ இல்லையோ ராகுலுக்கு நன்றாக பொருந்தும்


Muthu Kumaran
ஜூலை 15, 2024 16:53

மேகதாது அணை கட்ட மணல் , ஜல்லி , சிமெண்ட் லாரி ஆகியவை காட்பாடியார் தருவார். contract வேரு யாரும் எடுக்க அனுமதி இல்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ