உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்வாதியை தாக்கியவர் மீது நடவடிக்கை ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் உறுதி

ஸ்வாதியை தாக்கியவர் மீது நடவடிக்கை ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் உறுதி

புதுடில்லி, டில்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. அவரை சந்திக்க, சமீபத்தில், டில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு, அவரது கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி.,யும், டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது அவரை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்திய ஸ்வாதி மாலிவால், முறைப்படி புகார் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது டில்லி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.இது குறித்து, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க காத்திருந்த ஸ்வாதி மாலிவாலிடம், பிபவ் குமார் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரம் முதல்வர் கெஜ்ரிவால் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Saai Sundharamurthy AVK
மே 15, 2024 21:57

இப்படியும் தகவல்கள் வருகிறது. கெஜ்ரிவால், தன்னுடைய ராஜ்யசபா எம்பிக்களை கட்சி பணி, மெரிட் பார்த்தெல்லாம் தேர்வு செய்யவில்லை. ஏதோ ஒரு வகையில் விற்று விட்டிருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது ஆம்ஆத்மி கட்சிக்கு கிடைத்த இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை சஞ்சய் சிங்க் , சுவாதி மாலிவால் ஆகிய இருவருக்கும் விற்றுவிட்டார். அவர்கள் இருவரும் அந்த பதவியை வைத்து முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்று கொண்டிருக் கிறார்கள். 50 நாட்களாக சிறையில் இருந்த கெஜ்ரிவால் எவ்வளவு முயன்றும் பெயில் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் குற்றவாளிகளின் உற்ற நண்பரான காங்கிரசின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞரும் ஆன தற்போதைய ராஜ்யசபா உறுப்பினரும் , அடுத்தமுறை வாய்ப்புக் கிடைக்க வாய்ப்பில்லாத போணி ஆகாதவரும் நல்ல ப்ரோக்கருமான அபிஷேக் மானு சிங் வை அணுகினார் கெஜ்ரிவால். உடனே நீதிபதிகள் என்னுடைய பேட்ச் தான் . தேர்தல் வரை பெயில் வாங்கித் தருகிறேன். எனக்கு என்னுடைய வழக்கறிஞர் கட்டணம் போக ராஜ்யசபா எம்பி பதவியும் உங்கள் கட்சியில் இருந்து தரவேண்டும்...டீலா ?என்று கேட்டிருக்கிறார் அபிஷேக் ... டபுள் டீல் என்று கெஜ்ரிவால் சொல்ல இதோ வெளியே வந்து விட்டார். நேற்று ஆம்ஆத்மி யின் ராஜ்யசபா எம்பியும், டெல்லி உமன் கமிஷன் உறுப்பினருமான சுவாதி மாலிவால் தன் கட்சியின் அழைப்பின் பேரில் டெல்லி முதல்வர் கேஜரிவால் இல்லம் சென்றார் . சென்றவரிடம் கேஜரிவாலின் டீல் விவகாரத்தை சொல்லி உடனடியாக ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய சொல்லி இருக்கிறார்கள். அவர் முடியாது என்று மறுக்க சூடான வாதத்துக்கிடையில் கெஜ்ரியின் உதவியாளர் பிபவ்குமார் மற்றும் இரண்டு பெண்கள் அவரை அடித்து துவைக்க ஆரம்பித்து விட்டார்கள் . ஸ்வாதியின் உடைகளை முடியை இழுத்து அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ கிடைக்கப் பெறுகிறது. ராஜ்யசபா எம்பியான தன்னை அடித்ததை நம்ப முடியாமல் திகைத்து நின்ற ஸ்வாதி, உடனடியாக டெல்லி சர்வீசஸ் லைன் காவல் நிலையத்துக்கு தொலைபேசி புகார் செய்திருக்கிறார் . மூன்று வேன்களில் போலீஸ் வர, அதற்குள் மொத்த வீடும் அசம்பாவிதம் நடந்ததை மறைக்கும் விதமாக சரி செய்யப்பட்டிருந்தது. ஆயினும் ஸ்வாதி, சர்வீசஸ் லைன் காவல் நிலையத்துக்கு சென்று தான் புகாரளித்தது உண்மை தானென்றும் பிற்பாடு வந்து எழுத்து வடிவ புகார் கொடுப்பதாகவும் சொல்லி விட்டு சென்று விட்டார்...! கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்ஜையும் இதை உறுதி படுத்தியதுடன், கெஜ்ரிவால் இது குறித்து அவரது உதவியாளர் மேல் நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லி விட்டார் . டெல்லி அரசியல் வட்டாரங்கள் சொல்வது கெஜ்ரிவால் சொல்லாமல் அவரது உதவியாளர் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை...! ஸ்வாதியின் கணவர் சொல்வது, ஸ்வாதி மிரட்டப் பட்டிருக்கிறார் என்று. பயப்படாமல் அவர் உண்மைகளை சொல்ல வேண்டும்...!!! சட்ட வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால் தேசதுரோகம், வலுவான ஆதாரம் உள்ள பொருளாதார குற்றங்கள் செய்து 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய எப்படி விடுவிக்கப்பட முடியும்?? குற்றவாளி மக்களுக்கு பாடம் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்கலாமா ?? இதுவரை இப்படி நடந்ததில்லை....!!! அபிஷேகுக்கும் நீதிபதிக்கும் உள்ள உறவை விசாரிக்க வேண்டாமா ???? இந்த தேர்தலில் ஆம் ஆத்மி ஜெயித்தால் நான் சிறை செல்ல வேண்டி இருக்காது என்று கேஜரி பிரச்சாரம் செய்வது முழுக்க முழுக்க சட்டத்தை மீறிய அல்லது நீதிமன்றத்தை கேலி செய்யும் செயல் அல்லவா ? நீதிமன்றம் ஏன் சுமோட்டோவாக இதை எடுத்துக் கொண்டு கெஜ்ரியின் பெயிலை ரத்து செய்யக் கூடாது ???? ஜூடிசியல் டிபார்ட்மென்ட் is at its low என்று தான் சொல்ல வேண்டும்.


rajan_subramanian manian
மே 15, 2024 12:10

எனக்கு தெரிந்து இந்த கேஜ்ரிவால் பஞ்சாபில் மட்டும் எப்படி அபரிமிதமாக ஜெயித்தார்? மற்றும் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், குடியுரிமை போராட்டம்,கனடாவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் சீக்கிய தீவிரவாத போராட்டம் எல்லாவற்றிலும் எதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது இந்த ஆளை பார்க்கின்றபோது நம்ப விடியல், பப்பு, சீமான், begam மம்தா எல்லோரும் சொக்கத்தங்கம் என்று கருதலாம்


Saai Sundharamurthy AVK
மே 15, 2024 10:44

அடுத்து யார் டெல்லி முதலமைச்சர் ஆவது என்பது குறித்து ஆம்ஆத்மி கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை!!! தலை முடியை ஒருவருக்கொருவர் இழுத்துப்பிடித்து சண்டையிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருக்கிறது. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டார். கெஜ்ரிவாலின் P.Aவே தாக்கினார். டெல்லி முதல்வர் அலுவலகத்திலிலேயே கடும் சண்டை நடப்பதாக செய்திகள் வருகின்றன, சுவாதி, மர்லோனா, சஞ்சய் என அனைவரும் முதல்வர் ஆக விரும்புகிறார்கள். ஆனால், கெஜ்ரிவாலோ, அரசியலுக்கே சம்பந்தமில்லாத தனது மனைவியை முதல்வராக ஆக்கி, கட்சியை குடும்ப கட்சியாக மாற்ற விரும்புகிறார். வரும் நாட்களில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது.


MANI DELHI
மே 15, 2024 09:24

அடித்தவர்களே நடவடிக்கை எடுப்பார்களாம் புரிந்ததா மக்களே


GMM
மே 15, 2024 08:01

பெண் உறுப்பினர் தாக்கிய விவகாரம் கெஜ்ரிவால் கவனத்திற்கு ஆம் ஆத்மி கொண்டு செல்லுமாம் டெல்லி ஆளுநர், பாராளுமன்ற சபாநாயகர் தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜாமீன் ரத்து கெஜ்ரிவால் கைது அவசியம் அரசியல் காரணமாக ஜாமீன், சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து?


Kavi
மே 15, 2024 06:49

Chor


Kasimani Baskaran
மே 15, 2024 06:04

ஜாமீனில் இருப்பவரின் செயலர் அவர் சொல்லாமல் ஸ்வாதியை தாக்கியிருக்க வாய்ப்பில்லை ஆகவே ஜாமீனை இரத்து செய்ய வேண்டும்


J.V. Iyer
மே 15, 2024 04:53

நாளொரு பொய், தினம்தோறும் நடிப்பு அதன் பெயர்கள் ஆம் ஆத்மி, கான்-கிராஸ், தீம்க, மம்தா கட்சி, கம்யூனிஸ்ட் கும்பல்,


kannan sundaresan
மே 15, 2024 04:09

AAPல் பெண்களின் நிலைமை இதுதான்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ