உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 மணி நேரத்துக்குள் கெஜ்ரிவால் விடுதலை: ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியா புது ஐடியா

24 மணி நேரத்துக்குள் கெஜ்ரிவால் விடுதலை: ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியா புது ஐடியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால், அரவிந்த் கெஜ்ரிவால் 24 மணி நேரத்துக்குள் சிறையில் இருந்து வெளியே வருவார்,'' என, ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

கைது

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 2023 பிப்., 26ல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்; தொடர்ந்து, அமலாக்கத் துறையாலும் கைது செய்யப்பட்டார்.இரு வழக்கிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டதையடுத்து, 17 மாத சிறைவாசத்துக்கு பின், திஹார் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.இந்நிலையில் நேற்று, டில்லியின் கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று, மணீஷ் சிசோடியா வழிபாடு செய்தார். தொடர்ந்து, மஹாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். அவருடன், ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், டில்லி அமைச்சர் ஆதிஷி உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதன் பின், ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடையே மணீஷ் சிசோடியா பேசியதாவது:சர்வாதிகாரத்துக்கு எதிராக முழு பலத்துடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தால், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 24 மணி நேரத்திற்குள் சிறையில் இருந்து வெளியே வருவார்.

போராட்டம்

அரசியல் சாசனத்தை விட, பா.ஜ., தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. தலைவர்களை சிறையில் அடைக்கும் மற்றும் குடிமக்களை துன்புறுத்தும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒவ்வொரு நபரும் போராட வேண்டும். ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வை படுதோல்வி அடைய வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAMAMOORTHY GOVI
ஆக 12, 2024 13:10

வெளியே வந்துருச்சுனு ...


Ramesh
ஆக 12, 2024 01:19

ஜானநாயகம் என்ற பெயரில் இவரை போன்ற தேச விரோதிகளை பேச விடுவது நாட்டிற்கு கேடு .


ராஜ்குமார்
ஆக 12, 2024 00:58

கோவா எலக்சனுக்கு ஹவாலாவில் பணம் செலவு செய்த கட்சி 5% இல் இருந்து 12% கமிஷன் அதிகமாக்கி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கட்சி இப்போது உத்தமனாக காடிகொள்கிரது


Ramesh Sargam
ஆக 11, 2024 12:50

இருபத்திநான்கு மணி நேரத்துக்குள் இவன் மீண்டும் சிறை செல்வது உறுதி.


Sridhar
ஆக 11, 2024 11:26

இவிங்களுக்கு வேணும்போது இந்தி கூட்டணி எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடனும். ஹரியானா பஞ்சாப் தேர்தல்னு வர்றப்போ, அவங்கள கழட்டிவிட்டுட்டு தனியா நின்னு எல்லாத்தையும் சுருட்ட பாப்பானுங்க. ஒண்ணுமில்ல, மதுபான விவகாரத்துல அடிச்ச பணத்துல ஒரு சிறுதுளி பங்கயாவது இந்தி கூட்டணி கட்சிகளிடம் பகிர்ந்திருப்பங்களா? இந்த ஆளு வெளியே வந்தும் மந்திரி ஆகமுடியாத நிலைமை பாவம் வீட்டை வேற பரிச்சிட்டாங்க. கெஜ்ரி வெளியே வந்தாதான் இந்த ஆளுக்கு பதவிங்கற நிலைமை. வேறென்ன செய்யுறது, கண்ணை மூடிக்கிட்டு 24 மணிநேரம் 1 மணிநேரம்னு கனவு கண்டுட்டே இருக்கவேண்டியதுதான். சீக்கிரம் கேச முடிச்சு இவனுகள நிரந்தரமா உள்ள தல்லலேன்னா நாடு உருப்படாது.


theruvasagan
ஆக 11, 2024 11:04

கேஸ் என்னமோ கோர்டுல இருக்கு. நிரபராதி என்று நிரூபித்துதான் வெளியே வரணும். இந்தாளு பேசறது வேற மாதிரியில்ல இருக்கு. சட்ட பூர்வமான வழியை கைவிட்டுட்டு இண்டி கூட்டணிகாரனுக கோர்டு வாசல்ல நின்னு ஆர்ப்பாட்டம் பண்ணனுமா. அப்படி நடந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகாதா.


GMM
ஆக 11, 2024 09:44

ஆம் ஆத்மி மதுபான ஊழலில் நடவடிக்கை எடுத்தது CBI, ED. சட்ட விதிகளுக்கு உட்படுத்தி தண்டித்தது நீதிமன்றம். நீதிமன்ற தீர்ப்பை சர்வாதிகாரம் என்று கூறுகிறாரா? ஊழல் பணம் மட்டும் ஆம் ஆத்மிக்கு. அனைத்து ஊழல் எதிர்க்கட்சி எப்படி உடன்படுவர்? குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது குழப்பம் விளைவிக்கிறது. ஆயிரத்தில் ஒரு ஊழல் தலைவருக்கு தான் சிறை. முழு தண்டனை அல்லது விடுதலை.


கூமூட்டை
ஆக 11, 2024 09:30

திருடவில்லை என்று நிரூபிக்க வேண்டும் பிறகு விடுதலை வாழ்க வளமுடன் ஊழல் அதில் வளர்க ஊழல் வாதிதக்காளி


Swaminathan L
ஆக 11, 2024 09:24

இண்டி கூட்டணி கெஜ்ரிவாலைக் கைவிட்டு சில மாதங்கள் ஆகி விட்டது. ஆம் ஆத்மி தொண்டர்களே போதும் போதும் என்று கப்சிப் ஆகி விட்டார்கள். பங்களாதேஷ் டைப் போராட்டத்தை இங்கே தூண்டுகிறார். அது நடக்காது.


Kasimani Baskaran
ஆக 11, 2024 08:00

சிறையில் முதல்வராக இருப்பவர் வெளியே கையெழுத்து போட முடியாத முதல்வராக இருப்பதை கெஜ்ரிவால் விரும்பமாட்டார்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ