மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago
ஜூலை:துணைநிலை கவர்னர் உத்தரவைத் தொடர்ந்து தெற்கு, மேற்கு, வடக்கு டில்லி பகுதிகளில் 120 பெரிய மற்றும் சிறிய தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ள ஏ.சி.பி., எனும் லஞ்ச ஒழிப்புத்துறை பட்டியல் தயாரித்து உள்ளது.கிழக்கு டில்லியின் விவேக் விஹாரில் பேபி கேர் நியூ பார்ன் சைல்டு என்ற தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு விதிமீறல்களே காரணம் என்பது, விபத்துக்கு பிந்தைய விசாரணையில் தெரிய வந்தது. தீத்தடுப்பு
மருத்துவமனையின் விதிமீறல்கள்:காலாவதியான அனுமதியின்படி கூட, ஐந்து குழந்தைகளை மட்டுமே ஒரே நேரத்தில் இங்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் விபத்து ஏற்பட்டபோது, 12 குழந்தைகளுக்கு இங்கே சிகிச்சையில் இருந்துள்ளனபி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை) படித்தவர்கள் இங்கே சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் அல்ல. அதனால் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் தீவிர சிகிச்சை அளிக்க தகுதி/திறமையானவர்கள் இல்லைஅவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீயணைக்கும் கருவியும் இல்லைஅவசர கால வழியும் இல்லைமருத்துவமனையில் தீத்தடுப்புக்கான தடையில்லாச் சான்று இல்லை.இந்த விபத்தை அடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் முறைப்படி இயங்குகின்றனவா, சுகாதாரத்துறை அதிகாரிகளின் விதிமீறல்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா மே 28ல் உத்தரவு பிறப்பித்திருந்தார். இரண்டாம் கட்டம்
இதையடுத்து, முதற்கட்டமாக கடந்த மாதம் நடத்திய ஆய்வில் 62 தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நான்கு மருத்துவமனைகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அத்துடன் 40 மருத்துவமனைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தெற்கு, மேற்கு, வடக்கு டில்லி பகுதிகளில் 120 பெரிய மற்றும் சிறிய தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள ஏ.சி.பி., திட்டம் வகுத்துள்ளது.இந்த இரண்டாம் கட்ட ஆய்வுகளை ஏ.சி.பி., அதிகாரிகள் நேற்று துவங்கினர். இம் மாத இறுதிக்குள் முடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த ஆய்வின்போது, மருத்துவமனைகள் உரிய அனுமதி பெற்று இயங்கு கின்றனவா, மருத்துவப் பணியாளர்கள் எல்லோரும் தகுதியானவர்களா, கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்து விதமான சான்றிதழ்களும் சரிபார்க்கப்படுகின்றன.
2 hour(s) ago