உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை பாயும்

குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை பாயும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'குழந்தைகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் வலியுறுத்தியுள்ளது.நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஹிந்து குழந்தைகள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

நடவடிக்கை

இது குறித்து புதுடில்லியில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.இதன் தலைவர் பிரியங்க கனுாங்கோ தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:ஹிந்து குழந்தைகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து புகார்கள் வருகின்றன.அவர்களின் மத சுதந்திரத்தை யாரும் மீறக்கூடாது. குழந்தைகள் உரிமைகள் தொடர்பான இந்த விஷயத்தில், அடிப்படைவாதிகளின் தவறான நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்பி, குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம் என, பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும். மதரசாக்கள் இஸ்லாமிய மதக் கல்வியை வழங்குவதற்கான மையங்கள். இவை கல்வி உரிமைச் சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை.இதுபோன்ற சூழலில், ஹிந்து உள்ளிட்ட முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரசாக்களில் வைத்திருப்பது, அவர்களுக்கு இஸ்லாமிய கல்வி போதிப்பது, குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.இதுவே சமூகத்தில், மத விரோதத்தை பரப்புவதற்கு காரணமாக அமையும்.எனவே, மதரசாக்களில் பயிலும் ஹிந்து குழந்தைகள், அனைத்து கல்வி உரிமைகளை பெறும் வகையில், அவர்களுக்கான பள்ளிகளில் சேர்க்குமாறு மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

வதந்தி

உத்தர பிரதேச அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து குழந்தைகளும் கல்வி உரிமையை பெற வேண்டும் என்ற நோக்கில் பிறப்பிக்கட்ட இந்த உத்தரவு குறித்து, சில அமைப்புகள் தேவையற்ற வதந்திகளை பரப்பி மக்களை தவறாக வழி நடத்துகின்றன.அரசுக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை துாண்டும் இந்தச் செயலுக்கு எதிரான நடவடிக்கைகளை கமிஷன் எடுத்துள்ளது. வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்