உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த கட்சிக்கும் ஆதரவில்லை நடிகர் அமீர்கான் விளக்கம்

எந்த கட்சிக்கும் ஆதரவில்லை நடிகர் அமீர்கான் விளக்கம்

மும்பை, பாலிவுட் நடிகர் அமீர்கான், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசுவது போல வெளியாகி உள்ள, 'வீடியோ' போலியானது என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், வரும் 19ல் துவங்கி, மே 20 வரை ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் அமீர்கான் பேசும் வீடியோ, சமூகவலைதளங்களில் வெளியானது. இது குறித்து அமீர்கான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்:நடிகர் அமீர்கானின் 35 ஆண்டு கால திரை வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் இதுவரை ஆதரவாக பேசியதில்லை. அப்படியிருக்கையில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அவர் ஆதரவாக பேசியது போல சமீபத்தில் வெளியாகி உள்ள வீடியோ போலியானது. இது தொடர்பாக, மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அமீர்கான் பங்கேற்ற, 'சத்யமேவ ஜெயதே' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம் பெற்ற காட்சிகளை வைத்து, 'டீப் பேக்' தொழில்நுட்பத்தில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை