மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13
பிரபல சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெய்ராம், ஆந்திராவில் நடந்த விபத்தில் நேற்று உயிரிழந்தார்.மாண்டியாவின் ஹனகெரே கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா ஜெய்ராம், 35. இவர், கன்னடத்தில், ஜோகாலி, ரோபோ பேமிலி, ராதா ரமணா, நீலி ஆகிய டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.தற்போது, தெலுங்கில் திரினயினி என்ற டிவி சீரியலில், திலோத்தமே என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தால், தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்துள்ளார்.ஹைதராபாதில் தங்கி இருந்த அவர், சூட்டிங்கிற்காக, நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். ஆந்திராவின் மெகபூப் நகர் அருகில் சென்ற போது, சாலை விபத்து ஏற்பட்டது. இதில் உடல் நசுங்கி, நடிகை பவித்ரா ஜெய்ராம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்புக்கு கன்னட, தெலுங்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மாண்டியாவில் உள்ள அவரது சொந்த கிராமமான ஹனகெரே மக்கள் சோகமடைந்துள்ளனர். 'மிகவும் கஷ்டத்தில் இருந்து வந்த அவர், உழைப்பால் முன்னேறினார்' என்று கிராமத்தினர் கூறினர்- நமது நிருபர் -.
5 hour(s) ago | 5
5 hour(s) ago | 1
8 hour(s) ago | 13