உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை தமன்னாவுக்கு போலீஸ் சம்மன்

மஹாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை தமன்னாவுக்கு போலீஸ் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'மஹாதேவ்' சூதாட்ட செயலியில் ஐ.பி.எல்., போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு தொடர்பான விளம்பரத்தில் நடித்த நடிகை தமன்னாவை, வரும் 29ல் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிஉள்ளனர்.'மஹாதேவ்' சூதாட்ட செயலி ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை மத்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஒளிபரப்பான ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் சில போட்டிகள், மஹாதேவ் செயலியில் சட்டவிரோதமாக நேரலை யில் ஒளிபரப்பானது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை மஹாராஷ்டிரா சைபர் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நேரலை ஒளிபரப்பு தொடர்பாக செயலியை நடத்தும் நிறுவனம் பல விளம்பரங்களை வெளியிட்டது. அதில், பல பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்தனர்.அந்த வகையில், நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் மேலாளர்களிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.ஹிந்தி, தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா, இந்த விளம்பரங்களில் நடித்துள்ளார்.இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சைபர் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 29ல் மும்பையில் உள்ள சைபர் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R Kay
ஏப் 26, 2024 03:18

எல்லா விதமான சூதாட்ட விளம்பரங்களையும் அரசு தடை செய்ய வேண்டும் டீமை தேர்வு செய்து பணத்தை இழக்கலாம் ஆம், இல்லை என தெரிவு செய்து பணத்தை இழக்கலாம் டிசைன் டிசைனாக யோசித்து நம்மிடமிருந்து ஆட்டயப்போடுகிறார்கள் நாமும் ஏமாறுகிறோம் எதுவும் இங்கு நம்மை பணக்காரர்களாக்க நடத்தப்படவில்லை அவர்கள் காசு பார்க்கவே எல்லா சூதாட்டங்களும் நடக்கின்றன quick money ஆசையை விட்டு உழைத்து சம்பாதித்து நம் வரவிற்குள்ளான நமக்கான வாழ்க்கையை வாழ்வோம் இந்த கயவர்களின் கவர்ச்சி விளம்பர வலையில் வீணாய் விழுந்து நம் hard earned money-ஐ இழக்க வேண்டாம்


R Kay
ஏப் 26, 2024 03:11

காசுக்காக எதையும் செய்யும் கூத்தாடிகள் மக்கள் தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை என தாங்களே தீர்மானித்து செயல்பட வேண்டும் கூத்தாடிகளின் விளம்பரத்தில் மயங்கி எதையும் வாங்கக்கூடாது எந்த செயலிலும் இறங்கக்கூடாது நம் நஷ்டம் அவர்களின் லாபம்


தாமரை மலர்கிறது
ஏப் 26, 2024 02:26

தவறான விளம்பரங்களில் நடிப்பதற்கு முன், பிரபலங்கள் யோசிக்கவேண்டும் வெறும் பணம் சம்பாரிப்பதை குறிக்கோளாக வைத்திருக்க கூடாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை