உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பானியை முந்திய அதானி; வாராவாரம் உருவாகும் புது கோடீஸ்வரர்கள்...: வெளியானது இந்திய பணக்காரர்கள் பட்டியல்

அம்பானியை முந்திய அதானி; வாராவாரம் உருவாகும் புது கோடீஸ்வரர்கள்...: வெளியானது இந்திய பணக்காரர்கள் பட்டியல்

டில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

5 நாளுக்கு ஒரு கோடீஸ்வரர்

ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாகி வருவதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும், கூடுதலாக 220 பேர் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0uae9fgm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரியல் எஸ்டேட்

குறிப்பாக, 1,334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதில், 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ரியல் எஸ்டேட், தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் துறைகளின் வளர்ச்சியாகும்.

100 கோடிக்கு மேல்

அதேவேளையில், 205 பேரின் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், 45 பேர் இந்தப் பட்டியலில் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 354 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அறிக்கையில் சொல்லப்படுகிறது. அதிலும், 21 வயதுடைய இளம் தொழிலதிபரும் இந்தப் பட்டியலில் இருப்பது தான் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

முதலிடம்

இந்த நிலையில், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி தொழிலதிபரான அம்பானியை பின்னுக்குத் தள்ளி, தொழிலதிபர் அதானி முதலிடம் பிடித்துள்ளார். 3வது இடத்தில் எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உள்ளார்.

டாப் 10 இந்திய பணக்காரர்களின் முழு விபரம்

1.கவுதம் அதானி - 11.61 லட்சம் கோடி2.முகேஷ் அம்பானி - 10.14 லட்சம் கோடி3.ஷிவ் நாடார் -3.14 லட்சம் கோடி4.சைரஸ் பூனாவாலா - 2.89 லட்சம் கோடி5.திலிப் சங்வி - 2.49 லட்சம் கோடி6.குமார்மங்கலம் பிர்லா - 2.35 லட்சம் கோடி7.கோபிசந்த் ஹிந்துஜா - 1.92 லட்சம் கோடி8.ராதாகிஷன் தமானி - 1.90 லட்சம் கோடி9.அஸீம் பிரேம்ஜி - 1.90 லட்சம் கோடி10.நீரஜ் பஜாஜ் - 1.62 லட்சம் கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Corporate Goons
ஆக 29, 2024 22:46

மோடியின் துணையுடன் ஒட்டு மொத நாட்டையும் , நாட்டை அந்நியர்களுக்கு காட்டிக்கொடுத்து மற்ற நாடுகளிலும் கொள்ளையடிக்கும் கும்பல், போட்டி போட்டு கொள்ளையடிக்கும் கும்பல்.


Sainathan Veeraraghavan
ஆக 29, 2024 15:56

ENTIRE WEALTH OF THE UNITED STATES OF AMERICA IS CONTROLLED AND OWNED BY JUST 1% POPULATION. THE DISPARITY BETWEEN HAVES AND HAVE NOTS IS WIDENING . IT IS THE SAME CASE IN EVERY COUNTRY INCLUDING COMMUNIST CHINA. IT IS FREE MARKET. THOSE WHO HAVE MONEY AND USE THEIR ACUMEN AND INVEST REAP THE BENEFITS. THERE IS NO USE IN WHINING UNNECESSARILY.


ram
ஆக 29, 2024 15:36

எங்கேய கோபாலபுர அரசர்கள் பெயர் illaiey


thamizhagam
ஆக 29, 2024 14:44

naalukku naal pitcha kaaranum ingu thaan athigamaaka oruvaakiraan


thamizhagam
ஆக 29, 2024 14:42

soothaaddam


KRISHNAN R
ஆக 29, 2024 14:13

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு..... சரியான.. பொருட் பங்கீடு இல்லை.. எனவே... இந்த பெரிய கம்பெனிகள் மட்டும் வளர்கின்றன. .... ஏழை நடு்தர மக்கள் வேறுபாடு.. வுயர்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை