உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி!

ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார். அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கவுதம் அதானி, 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்புடன், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். முதல் இடத்தில் இருந்த, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 109 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.‛புளூம்பெர்க் பில்லியனர்ஸ்' பட்டியலில், உலகின் முதல் 10 பணக்காரர்கள் விபரம்: 1. பெர்னார்ட் அர்னால்ட், 2. எலான் மஸ்க், 3. ஜெப் பெசோஸ், 4. மார்க் ஜுக்கர்பெர்க், 5. லாரி பேஜ், 6. பில் கேட்ஸ், 7. செர்ஜி பிரின், 8. ஸ்டீவ் பால்மர், 9. வாரன் பபெட் 10. லாரி எலிசன்.டாலர் 111 பில்லியன் நிகர மதிப்புடன் 11 வது இடத்தை அதானி பிடித்துள்ளார். 109 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 12 வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் மோசடி, பங்குச் சூழ்ச்சிகள் மற்றும் பலவற்றின் குற்றச்சாட்டுகள் காரணமாக 2023 ஜனவரியில் அதானியின் சொத்து மதிப்பில் இருந்து 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்தது. தற்போது அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், பணக்காரர் பட்டியலில் அதானி முன்னோக்கி செல்ல வழி வகுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
ஜூன் 02, 2024 22:45

எப்புடீ....


Vijay D Ratnam
ஜூன் 02, 2024 20:38

இந்தாண்டு இறுதிக்குள் கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் விழிஞ்ஞம் எனும் ஊரில் இந்தியாவின் முதல் தாய்த்துறைமுகம் என்ற பெருமையோடு அதானி இன்டர்நேஷனல் ட்ரான்ன்ஷிப்மென்ட் மதர்போர்ட் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதன் பிறகு இந்திய சரக்குகள் அதிக செலவு, காலவிரயம் செய்து தாய் துறைமுகங்களான துபாய், கொழும்பு, சிங்கப்பூருக்கு சென்று டிரான்ஷிப்மெண்ட் செய்ய வேண்டிய வேலை இருக்காது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை உறுதியாக பிடிப்பார். தொடர்ந்து பல வருடங்களுக்கு அதானி முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டும் இருப்பார்.


முருகன்
ஜூன் 02, 2024 19:24

அடுத்த ஜந்து வருடத்தில் வளர்ச்சி உலக அளவில் இருக்கும்


har
ஜூன் 02, 2024 21:50

என்னது முருகா.... வண்டி யூ ட்ரென் எடுக்குது..... நம்ப முடியலை


தாமரை மலர்கிறது
ஜூன் 02, 2024 19:19

வெற்றி மீது வெற்றி வந்து அடானியை சேரும்.


அப்புசாமி
ஜூன் 02, 2024 18:04

சும்மாவா.. கங்கிரசுக்கு கோடி கோடியா அள்ளி குடுத்திருக்காங்க


hari
ஜூன் 02, 2024 21:50

என்னது அப்பு .... பார்ரா........ வண்டி யூ ட்ரென் எடுக்குது..... நம்ப முடியலை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை