மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago
பெங்களூரு: முதல்வர் மாற்றம் தொடர்பாக, குரல் எழுப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், 'சித்தராமோற்சவம்' நடத்த முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், கர்நாடக காங்கிரஸ் அரசில் முதல்வர் மாற்றம் தொடர்பான சர்ச்சை நடந்து வருகிறது. சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கிவிட்டு, துணை முதல்வர் சிவகுமாரை முதல்வராக்க முயற்சி நடக்கிறது. இதைத் தடுக்க சித்துவின் ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். மேலிடம் கோபம்
சமீப மாதங்களாக இரண்டு கோஷ்டியினரும், பரஸ்பரம் கருத்துத் தெரிவித்து கட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர்.ஒக்கலிக மடாதிபதி சந்திரசேகர், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தரும்படி, சித்தராமையாவிடம் பகிரங்கமாக வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகளின் சில தலைவர்களும் ஆதரவு கருத்துத் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஆதரவு அதிகரிப்பதால், சித்தராமையா உள்ளுக்குள் கிலி அடைந்துள்ளார்.இந்நிலையில், முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஹூப்பள்ளியில் 'சித்தராமோற்சவம்' என்ற பெயரில், பிரமாண்ட நிகழ்ச்சி நடத்த ஆதரவாளர்கள் தயாராகின்றனர்.பிறந்த நாள் கொண்டாட்டம் பெயரில், அஹிந்தா எனும் சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டோர், தலித் அமைப்பினர் மாநாடு நடத்தி சித்தராமையாவின் சக்தியை காண்பிப்பது, ஆதரவாளர்களின் திட்டம். பெரிய வெற்றி
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தாவணகெரேவில் சித்தராமோற்சவம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்தினர். இது பெரிய வெற்றி பெற்றது. அதே போன்று, இம்முறை ஹூப்பள்ளியில் நிகழ்ச்சி நடத்த ஆதரவாளர்கள் தயாராகின்றனர். ஹூப்பள்ளியில் மாநாடு நடத்த, காரணம் உண்டு.சித்தராமையா ம.ஜ.த.,வில் இருந்தபோது, ஹூப்பள்ளியில் அஹிந்தா மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்கக் கூடாது என, தேவகவுடா உத்தரவிட்டிருந்தார். இதை பொருட்படுத்தாமல் சித்தராமையா மாநாட்டுக்குச் சென்றார். அந்த மாநாடு வெற்றி அடைந்தது.கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், சித்தராமையாவை கட்சியில் இருந்து நீக்கினர். இதை மனதில் கொண்டு, இம்முறை ஹூப்பள்ளியில் அஹிந்தா மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதன் மூலம் தங்கள் சக்தியை காண்பித்து, 'முதல்வர் மாற்றம்' என்ற கோஷத்தை ஒடுக்க முயற்சிக்கின்றனர். 76வது பிறந்த நாள்
அஹிந்தா தலைவர் மத்தண்ணா சிவள்ளி கூறியதாவது:ஆகஸ்ட் 12ல், முதல்வர் சித்தராமையாவின் 76வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை 'சித்தராமோற்சவம்' என்ற பெயரில் கொண்டாட, நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முதல்வர் தேதி முடிவு செய்த பின், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். இது தொடர்பாக, ஆலோசனை நடத்த இன்று முதல்வரை சந்திக்க உள்ளோம்.ஏற்கனவே முதல்வரை தேர்வு செய்தாகிவிட்டது. இனி மாற்ற முடியாது. முதல்வரை மாற்றினால், கட்சி பெரும் கஷ்டத்தை அனுபவிக்க நேரிடும். தேன் கூட்டில் கட்சி மேலிடம் கைவிடாது. ஒரு வேளை முதல்வரை மாற்றினால், தென் மாநிலங்கள் பற்றி எரியும்.இவ்வாறு அவர்கூறினார்.
7 hour(s) ago | 1
7 hour(s) ago