உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லக்கேஜ் தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்

லக்கேஜ் தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக்கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக, 'லக்கேஜ் லாசர்ஸ் டாட் காம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், பயணியர் தொலைத்த லக்கேஜ் எண்ணிக்கைகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது. இதன் தரவுகளின்படி, ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில், 50,001 லக்கேஜ்களை தவற விட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனம், ஒவ்வொரு 36 லக்கேஜ்களில், ஒரு லக்கேஜை தவறவிட்டுள்ளது. அத்துடன் அதிகளவில் லக்கேஜ்களை தொலைத்த விமான நிறுவனங்களின் பட்டியலில், அதிக எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்திய விமான நிறுவனங்கள், ஒவ்வொரு 72 லக்கேஜ்களில் ஒன்றை தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஏர் இந்தியாவை தொடர்ந்து, 'வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ், ஏர் லிங்க்ஸ்' ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:35

சிறப்பு இந்த நிறுவனங்களுக்கு அரசே தண்டனை கொடுக்க வேண்டும் விமான துறை அமைச்சருக்கு தெரியுமா ? செயலருக்கு தெரியுமா ? தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருக்கணும், இல்லையெனில் இப்படித்தான் அவமானம் வரும்.


R Hariharan
ஜூலை 08, 2024 14:17

இங்க டாடா கம்பெனி மீது குற்றம் கண்டுபிடிக்க நிறைய பேர் இருக்குரியல்கள். டாடா கம்பெனி ஒரு திறமையான கம்பெனி. ஒரு சில தவறு நடக்க வாய்ப்பு இருக்கு. அவர்கள் கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார்கள்.


Senthoora
ஜூலை 08, 2024 13:26

அதுஎப்படி, நாம விமான நிலையத்துக்குள் போகவே பல செக்கிங், உள்ளே உள்ள லக்கேஜ் எப்படி செக்கிங் இல்லாமல் காணாமல் வெளியே போனது.


Lion Drsekar
ஜூலை 08, 2024 12:22

வெளிப்படையாக சொல்ல ஏன் தயக்கம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள் யார் ? அழுத்தம் காரணமா ? அவர்கள் வேலை செய்கிறார்களா ? அல்லது அரசு வேளையில் இருப்பவர்கள் போல் அவர்கள் ஏதாவது சங்கத்தில் உறுப்பினர்களோ ? இல்லையென்றால் இப்படி அடக்க காரணமே இல்லை ? அல்லது இவர்களது இயறைக்கெடுக்க போட்டியாளர்கள் செய்யும் இடையூறா . இவைகளை ஆராய்ந்து களைந்தாள் மட்டுமே நல்லது, இல்லையென்றால் பயணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு நட்டஈட்டு கொடுக்கவே இந்த கம்பெனியின் வருமானம் செலவாகும், வந்தே மாதரம்


rau
ஜூலை 08, 2024 10:39

AIR INDIA was under govt control till TATA took over the management , all personnel working who were working under govt were retained,so efficiency of the airline continued to deteriorate , if all the old set of people either retire or removed and youngsters brought in we may expect efficiency like other TATA group.


sethu
ஜூலை 08, 2024 09:44

ஸ்பைஸ் ஜெட் நல்லா சர்வீஸ் பன்றதாக செய்ததாக ஒரு விளம்பரம் போடுங்க


அனகாரிகா
ஜூலை 08, 2024 08:34

பரவாயில்லை. இதிலாவது முதலிடத்தில் இருக்கோமே...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி