உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்கார விவகாரம் அகிலேஷ் கருத்தால் சர்ச்சை

சிறுமி பலாத்கார விவகாரம் அகிலேஷ் கருத்தால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இரு மாதங்களுக்கு முன், 12 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த மொய்த் கான், ராஜு கான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். சமீபத்தில், சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் கர்ப்பமானது தெரிய வந்ததை அடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபமானது. இதையடுத்து, மொய்த் கான் மற்றும் ராஜு கானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மொய்த் கான் சமாஜ்வாதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், அயோத்தியில் மொய்த் கானுக்கு சொந்தமான பேக்கரியை, மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் வாயிலாக நேற்று இடித்து தள்ளினர்.இதற்கிடையே, சமாஜ்வாதி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இது குறித்து கூறுகையில், ''கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மரபணு சோதனை நடத்தாமல், அவர்கள் தான் குற்றவாளிகள் என அறிவிப்பது, பாரபட்சமான நடவடிக்கை,'' என்றார். இதற்கு பகுஜன் சமாஜ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'ஓட்டு வங்கி அரசியலுக்காக குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதை, அகிலேஷ் யாதவ் நிறுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nandakumar Naidu.
ஆக 04, 2024 13:24

சமாஜ்வாதி கட்சி ஒரு தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத கட்சி தான். மண்ணோடு மண்ணாக அழிக்கபடவேண்டிய கட்சிகளில் இதுவும் ஒன்று. இண்டி கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே தேச, சமூக ,ஹிந்து விரோத கட்சிகள் தான்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 12:31

கோட்ஸே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தாரா? இல்லை.. இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிரச்சாரம். கோட்சே தனது கையிலோ அல்லது உடலிலோ எதையும் பதித்ததோ அல்லது பச்சை குத்தியதோ இல்லை. உண்மையில், காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு, கோட்சே போலீஸில் சரணடைந்தார். காந்தியை அவர் சுட்டுக் கொன்ற பிறகு அந்த இடத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டது, அதைப்பயன்படுத்தி அவர் எளிதில் தப்பித்திருக்கலாம். அந்த நேரத்தில் தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறவில்லை என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை, மேம்பட்ட பாலிஸ்டிக் ஆராய்ச்சி இல்லை, டிஎன்ஏ அடையாளம் இல்லை, முக மறுசீரமைப்பு இல்லை அவர் தப்பித்தால் ஒருபோதும் சிக்க மாட்டார். ஆனால் அவர் சரணடைவதைத் தேர்ந்தெடுத்து நீதிமன்றத்தின் முன் தனது கதையைச் சொன்னார். நீதிமன்றத்திலோ அல்லது வெளியிலோ தான் ஒரு இந்து என்றும் தன் பெயர் நாதுராம் கோட்சே என்றும் அவர் ஒரு போதும் மறுத்துவிடவில்லை .....


Kasimani Baskaran
ஆக 04, 2024 06:28

கடைசியில் யார் ஆய் போனது என்று டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்தது போலத்தான் ஆகும். திராவிட தொழில் நுணுக்கம் வட மாநிலங்களிலும் பிரபலமாகிறது.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 04, 2024 04:43

அகிலேஷ் புத்தி தெரிந்திருந்தும் அவனுக்கும் அவன் கைத்தடி பயங்கரவாதிகளுக்கும் வோட்டை போட்ட அறிவாளி ஹிந்துக்குளுக்கு இப்போதாவது புரிந்தால் சரி.


rao
ஆக 04, 2024 08:50

SC/ST, OBC communities are culprits who voted for Akhilesh Yadav, they were brain washed by dotted alliance parties in LS.elections.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 03:34

இண்டி கூட்டணிக்கட்சிகளே விவகாரமான கட்சிகள்தான் .....வருவது பழைய செய்தி ..... கேரள சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட நான்கு பேருக்கும் மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகவதி உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை