உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோதனை அடிப்படையில் மேம்பாலத்தில் அனுமதி

சோதனை அடிப்படையில் மேம்பாலத்தில் அனுமதி

ஆனந்த் விஹார்:அப்சரா எல்லையில் இருந்து ஆனந்த் விஹார் வரையிலான மேம்பாலத்தில் சோதனை அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.ஆனந்த் விஹார் மற்றும் அப்சரா பார்டர் இடையே சாலை எண் 56-க்கு மேல் 1,440 மீட்டர் நீளமுள்ள ஆறு வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், ராம்பிரஸ்தா காலனி, விவேக் விஹார் மற்றும் ஷ்ரேஷ்ட் விஹார் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.மேம்பாலத்தின் துாண்கள் பல்வேறு பறவைகளின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.இந்த மேம்பாலத்தை தினமும் 1.48 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திலும், பயணிகளுக்கு 11 நிமிடங்களுக்கு மேல் மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை