உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி : 18 பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி : 18 பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டதாக 18 பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ஜார்க்கண்ட் மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்கியது இதில் எதிர்க்கட்சியான பா.ஜ. எம்.எல்.ஏக்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஹேமந்த் சோரன் பதிலளிக்க மறுத்தார். பா .ஜ., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர்.இதையடுத்து அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாக 18 பா.ஜ. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ரவீந்திரா மகாதோ உத்தரவிட்டு சபையை விட்டு வெளியேயேற உத்தரவிட்டார். வெளியேற மறுத்ததால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 01, 2024 20:40

மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்காமல், இப்படி அமளியில் ஈடுபடவா நாம் இவர்களை தேர்ந்து எடுக்கிறோம். இல்லை, இப்படி அமளியில் ஈடுபடுவதால் மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடுமா?


தமிழ்வேள்
ஆக 01, 2024 21:00

இந்த கேள்வி காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி எம்.பிக்கள, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள எதிர் கட்சி எம்எல்ஏ க்களை கேட்க வேண்டும்..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை