உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலுக்கு பூட்டு போட வைத்த விவசாயிக்கு உற்சாக வரவேற்பு 

மாலுக்கு பூட்டு போட வைத்த விவசாயிக்கு உற்சாக வரவேற்பு 

ஹாவேரி: வேட்டி கட்டியதால் காவலாளியால் அவமதிக்கப்பட்டு, மாலுக்கு பூட்டு போட வைத்த விவசாயிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஹாவேரியை சேர்ந்தவர் பக்கீரப்பா, 62; விவசாயி. இவரது மகன் பெங்களூரு விஜயநகரில் வசிக்கிறார். கடந்த ஜூலை மாதம் மகனை பார்க்க, பக்கீரப்பா பெங்களூரு சென்று இருந்தார். தந்தையும், மகனும் படம் பார்க்க, ஜி.டி., மாலுக்கு சென்றனர்.பக்கீரப்பா வேட்டி கட்டி, தலைப்பாகை அணிந்து இருந்ததால், அவரை மாலுக்குள் அனுமதிக்க காவலாளி மறுத்தார். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, மாலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒரு வாரம் சீல் வைத்தனர்.மாலின் உரிமையாளர், பக்கீரப்பாவை தனது வீட்டிற்கு வரவழைத்து மன்னிப்பும் கேட்டார். கடந்த ஒரு மாதமாக மகன் வீட்டில் தங்கி இருந்த பக்கீரப்பா, நேற்று காலை ஹாவேரி வந்தார். அவரை ஊர் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். குடும்பத்தினர் அவருக்கு திருஷ்டி சுற்றி போட்டனர்.சிறிது நேரம் வீட்டில் ஓய்வு எடுத்த பக்கீரப்பா, பின் ஆடுகளை மேய்க்க புறப்பட்டார். 'மாலுக்குள் அனுமதிக்காத விஷயத்தில், தனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய, அனைவருக்கும் நன்றி' எனவும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி