மேலும் செய்திகள்
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
1 hour(s) ago | 1
புதுடில்லி:பணம் எடுக்க உதவுவதைப் போல நடித்து, ஏ.டி.எம்., கார்டுகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லி கரோல் பாக் பகுதியில் கடந்த 5ம் தேதி ஏ.டி.எம்., மையத்தில் தன்னுடைய பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏ.டி.எம்.,மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தர் குமார் மீனா என்பவரை டில்லி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 192 ஏ.டி.எம்., கார்டுகள், 24 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு தங்க கம்மல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்அவரிடம் நடத்திய விசாரணையில் ஹரியானா, ராஜஸ்தான், டில்லி முழுவதும் இதுபோன்ற 26 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதும் ராணுவத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.இவரது சொந்த கிராமமான ராஜஸ்தான் மாநிலம், நியோரானாவில் 'ராபின்ஹுட்' என்று அழைக்கப்படுகிறார் என போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணிடம் ரூ.23 லட்சம் பறிப்புபுதுடில்லி, மே 17-இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து நல்ல வருமானத்தைப் பெற உதவுவதாகக் கூறி, பெண்ணிடம் 23.5 லட்ச ரூபாய் மோசடி செய்த 29 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.வடகிழக்கு சைபர் காவல் நிலையத்தில் 32 வயதான பெண் ஒருவர், கடந்த மாதம் 10ம் தேதி மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில், இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் பெற உதவுவதாகக் கூறி, சிறுக சிறுக 23.5 லட்ச ரூபாயை பெற்று, மோசடி செய்ததாக கூறியிருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த மோசடி தொடர்பாக 29 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.இளம்பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து இவரது வங்கிக்கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதும் அதன் பின்னர் 11 வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.முதற்கட்டமாக 8.55 லட்ச ரூபாய் பணத்தை இவரது வங்கிக்கணக்கில் இருந்து மீட்ட போலீசார், 17 சிம் கார்டுகள், 11 டெபிட் கார்டுகள், நான்கு வங்கிக்கணக்கு புத்தகங்கள், 15 காசோலை புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
1 hour(s) ago | 1