உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராம வளர்ச்சிக்கு காரணமான ஆஞ்சநேயர்

கிராம வளர்ச்சிக்கு காரணமான ஆஞ்சநேயர்

கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவில்கள் ஏராளம். ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தன்மை, சிறப்பு உள்ளது. இவற்றில் ஹாசனின் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கட்டிய பின், கிராமம் வளர்ச்சி அடைந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்.ஹாசன் நகரின், ஹனுமந்தபுரா கிராமத்தில் 'பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில்' அமைந்துஉள்ளது. இந்த கோவில் தனியாரோ அல்லது அரசு சார்பிலோ கட்டப்பட்டது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன், கிராமத்தினரே ஒன்று சேர்ந்து கட்டியதாகும்.இதில், 56 அடி உயரமான ஆஞ்சநேயர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.கோவில் கட்டிய பின், கிராமம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெரிய, பெரிய தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. கிராமத்தில் நிலத்துக்கு அதிக, 'டிமாண்ட்' உள்ளது. கிராமம் செழிப்படைந்ததற்கு, பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஆசியே காரணம் என, மக்கள் நம்புகின்றனர்.வாரந்தோறும் சனிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அன்றைய தினம் பால் அபிஷேகம், நெய் அபிஷேகம் நடக்கிறது.கோவிலின் மகிமையை பற்றி கேள்விப்பட்டு, வெளி மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.ஹாசன் நகரில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஹனுமந்தபுரா கிராமத்தின் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து, பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்களும் இயங்குகின்றன. சனிக்கிழமைகளில் வந்தால், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களை பார்த்து ஆனந்திக்கலாம். ஆஞ்சநேயரை தரிசித்து அருளை பெறலாம்.இதுபோன்று, துமகூரில், 161 அடி உயரமான பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.துமகூரு, குனிகல்லின் பிதனகெரேவில் உள்ள கோவிலில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமை பெற்றதாகும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை