மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 2
சார்மாடி காட் என்றால், அங்கு கொட்டி கிடக்கும் இயற்கை எழில் சட்டென நினைவுக்கு வரும். அது மட்டுமின்றி, ஒரு காவல் தெய்வமும் இங்குள்ளது, பலருக்கும் தெரியாது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாமா? காவல் தெய்வம்
சிக்கமகளூரு - தட்சிணகன்னடா இடையிலான சார்மாடி காட், மிகவும் பிரபலம். சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமானது. பூலோக சொர்க்கம்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சார்மாடி காட் பசுமையானது. இங்கு நீர்வீழ்ச்சிகள் ஏராளம். மழைக்காலங்களில் சுற்றுலா பயணியர் அதிகம் வருவர். சார்மாடி காட்டில் அண்ணப்பா சுவாமி என்ற காவல் தெய்வம் குடிகொண்டுள்ளார். நிலச்சரிவுகள், விபத்துகள் அதிகம் நடக்கும், அபாயமான சார்மாடி காட்டில் பயணம் செய்யும் மக்களை அண்ணப்ப சுவாமி காப்பாற்றுவதாக ஐதீகம்.சார்மாடி காட்டில் செல்லும்போது, சோமனகாடுவை கடந்தால் அண்ணப்ப சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சார்மாடி காடு
வாகனத்தில் செல்லும் பயணியர், கோவில் முன்வாகனத்தை நிறுத்தி, தங்கள் பயணம் ஆபத்தின்றி, இனிதாக இருக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்த பின் பயணத்தை தொடர்கின்றனர்.பஸ் ஓட்டுனர்கள் பலரும், பஸ்சை நிறுத்தி அண்ணப்ப சுவாமியை வணங்கிச் செல்கின்றனர். சிக்கமகளூரு - மங்களூரு இடையே இணைப்பு ஏற்படுத்தும், சார்மாடி காட்டில் அண்ணப்பா சுவாமி, மக்களுக்கு காவலாக நிற்பதாக மக்கள் நம்புகின்றனர். கோவிலை பற்றி பலருக்கும் தெரிவது இல்லை. தெரிந்தவர்கள் சுவாமியை தரிசனம் செய்யாமல் சென்றதும் இல்லை.
3 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago | 2