உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பெண் காயம்

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பெண் காயம்

இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. இதையடுத்து மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை சமீபகாலமாக தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன.நேற்று மேற்கு இம்பால் மாவட்டத்தின் கொடூர்ன் கிராமத்தில் பயங்கரவாத கும்பல், ராக்கெட் லாஞ்சர் மற்றும் ட்ரோன் வாயிலாக குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தியதில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர். ஐந்து வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் இரவு மீண்டும் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
செப் 03, 2024 05:33

காங்கிரஸ் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இப்படி கலவரத்தை நிகழ்த்துவது போல தெரிகிறது. இந்தியாவில் பிறந்தவர்கள் தவிர அனைவரையும் மியான்மாருக்கு விரட்டுவதே சிறந்த வழி. எல்லைகளில் வேலியமைத்து சாதாரணமாக கடந்து போகாத அளவில் இருப்பதே நல்லது.


A Viswanathan
செப் 03, 2024 11:53

அப்படியே விட்டு விடுங்கள்.அடித்து சாகட்டும்.அந்நிய சக்திகளின் தூண்டுதல் அதிகமாகி கொண்டே இருக்கிறது அங்கு.மக்களுக்கு புரியும் நிலை வரும் போது அடங்கி விடுவார்கள் தன்னால்.


முக்கிய வீடியோ