உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் விரோத முதல்வர் மகேஷ் கண்டனம்

மக்கள் விரோத முதல்வர் மகேஷ் கண்டனம்

ராம்நகர் : ''பெட்ரோல், டீசல் விலையை முதல்வர் சித்தராமையா நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் மகேஷ் குற்றம் சாட்டினார்.கனகபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெட்ரோல், டீசல் விலையை முதல்வர் சித்தராமையா நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. மாநில அரசின் கஜானா காலியாக உள்ளதால், பெட்ரால், டீசல் விலையை திடீரென உயர்த்தியதால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை; சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. தலித் சமுதாயத்துக்காக ஒதுக்கப்பட்ட பணமும், தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்று கூறி, பஸ் கட்டணத்தை உயர்த்துவது வெட்கக்கேடானது.சித்தராமையா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, பா.ஜ., ஆட்சியில் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் உயர்த்தியபோது கண்டித்தார். இப்போது மூன்று மடங்கு உயர்த்தி, மக்கள் விரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.பா.ஜ., ஆட்சியில் விவசாயிகளின் விவசாய பணிகள், போதிய மின்சாரம், மின்மாற்றிகள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை