உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்., மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வி ஆலோசகர்கள் நியமனம்

பெங்., மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வி ஆலோசகர்கள் நியமனம்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கிலும் கல்வி ஆலோசகர்களை மாநகராட்சி கல்விப்பிரிவு நியமித்துள்ளது.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சியின் பள்ளி, கல்லுாரிகளில் கல்வி தரம், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக கல்வி ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.கடந்த முறை கல்வித்துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் கெஞ்சேகவுடா, தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவருடன் சேர்த்து, கல்வித்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் ராமாஞ்சனேயா, பெங்களூரு மாநகராட்சியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஓபலேஷப்பா ஆகியோர் கல்வி ஆலோசகராக நியமிக்கப்பட்டனர். இம்முறையும் இவர்களே செயல்படுவர்.இவர்கள் மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் கல்வி தரம் மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறுவர்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை