உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரவை குழு உறுப்பினர்கள் நியனம் : கூட்டணி கட்சிகளுக்கு தாராளம்

மத்திய அமைச்சரவை குழு உறுப்பினர்கள் நியனம் : கூட்டணி கட்சிகளுக்கு தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு விவகாரங்களுக்கான கமிட்டி உறுப்பினர்களில் கூட்டணி கட்சியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் கூட்டணி அரசில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில் மத்திய அமைச்சரவைக்கான நியமன குழு, பொருளாதார விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள், பாராளுமன்ற விவகாரங்கள், பாதுகாப்புக்கான தொடர்பான குழு என பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரின் பெயர் பட்டியல் இன்று வெளியானது. இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்