உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்: ஜாமின் மனு ஒத்திவைப்பு

கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்: ஜாமின் மனு ஒத்திவைப்பு

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, கெஜ்ரிவால் நாளை மீண்டும் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் வழக்கமான ஜாமின் கேட்டு, அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஜூன் 01) விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை வாதம்

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், '' பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து தவறான கருத்துகளை கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிரானது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். அதில் விசாரணை நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது'' என வாதிடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r2gh0fgw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, நீங்கள் மீண்டும் சரண் அடையப் போகிறீர்களா? என டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி காவேரி கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு, எனக்கு எந்த நிவாரணமும் நீதிமன்றம் வழங்கவில்லை எனில், வேறு எந்த வாய்ப்பும் இல்லை. சரணடைவேன் என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, கெஜ்ரிவால் நாளை மீண்டும் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. நாளை மதியம் மீண்டும் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வார் என டில்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
ஜூன் 01, 2024 22:56

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது வெறும் கற்பனை என்று நீதித்துறை நிரூபித்து விட்டது.


sankaranarayanan
ஜூன் 01, 2024 21:35

பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறதுக்கு திரும்பவும் திகார் சிறைச்சாலை கதவுகள் திறக்கப்படுமா இவருக்கு அங்கே திரும்பவும் எவ்வளவு காலம் என்று யாராலும் யூகிச்சு சொல்ல முடியாது


M Ramachandran
ஜூன் 01, 2024 19:51

அப்போ கொசு தொல்லை ஒழிந்தது


R Kay
ஜூன் 01, 2024 18:44

பை பை போலாம் ரைட்


R Kay
ஜூன் 01, 2024 18:15

Go back கேசரி


GMM
ஜூன் 01, 2024 17:58

சிறையில் இருந்தார். உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே இருந்து கொண்டு, சிறையில் இல்லாத போது எப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும் ? ஜாமீன் கேட்டு, சினிமா வடிவேலு சிறைக்குள் தான் இருந்தார். ஜாமீன் நீட்டிப்பு முறை உண்டா? சரண் யார் முன் அடைவார். இவரே சட்ட முறையை வகுத்து, பேட்டி கொடுத்து வருகிறார். கெஜ்ரிவால் தான் ஒரு குற்றவியல் கைதி என்று சற்றும் எண்ணாமல் அரசியல் / சட்டம் மூலம் தப்பி செல்ல முயல்கிறார். ஊழல் அரசியல்வாதிகள் மக்கள் ஆதரவு பணத்தால் நிர்ணயிக்க படுகிறது. அந்நிய ஆதரவு நாட்டிற்கு துரோகம் செய்து, ஆள் காட்டி வேலை செய்யும் போது செயல் படுகிறது. பெரும் குற்றம் புரிந்து அரசியல் ஆக்கி வருகிறார்.?


ganapathy
ஜூன் 01, 2024 17:32

இவருக்கு 3 வேளையும் மாம்பழமும் இன்சுலினும் மட்டுமே கொடுக்கணும்


Lion Drsekar
ஜூன் 01, 2024 16:52

எங்கிருந்தாலும் இவர்போன்றோருக்கு ராஜ வாழ்வுதான் . சிறையில் இருந்தாலும் அதே நிலைதான் . எந்த ஒரு முக்கிய பிரமுகர்களையும் அவ்வளவு எளிதில் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது , எந்த விதத்திலும் தொடர்பும் கொள்ள முடியாது அவ்வளவு பாதுகாப்பு . , அதைவிட பாதுகாப்பு சிறைச்சாலைகளில் . ஆகவே வாக்காளர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் உள்ள இடைவெளி ஒன்றுதான் . இதுவும் ஒரு செயல்பாடு . வந்தே மாதரம்


theruvasagan
ஜூன் 01, 2024 16:30

ஜாமீன் கெடு முடிவடைகிறது. பிறகு நீங்கள் மீண்டும் சரணடையப் போகிறீர்களா. இல்லையா.இது என்ன கேள்வி. குற்றம் சாட்டப்பட்டவருக்கே தான் உள்ளே போகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை தரப்பட்டுள்ளதா. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய ஜாமீன் வழங்கிய முடிவே இதுவரை கேள்விப்படாத ஒரு சலுகை என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு கேள்வி. எங்கே போகிறோம்.


Kumar
ஜூன் 01, 2024 15:50

எதுக்கு நிவாரணம். நல்ல கேள்வி அருமையான பதில்


மேலும் செய்திகள்