உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் ஆயுதங்கள் ஒப்படைப்பு

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023ல் இனக் கலவரம் ஏற்பட்டது. பல மாதங்கள் நீடித்த கலவரத்தில், 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் கலவரங்கள் கட்டுக்குள் வந்தன.மணிப்பூரில் உள்ள பொதுமக்கள் தங்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கும்படி, கவர்னர் அஜய்குமார் பல்லா கடந்த 20ம் தேதி உத்தரவிட்டார். அதேபோல், போராட்டக்காரர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும்படியும் உத்தரவிட்டிருந்தார். இதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் மாலை 4:00 மணியுடன் முடிந்தது. இந்நிலையில், இந்த பொது மன்னிப்பு காலத்தில், 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ