உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய எம்.பி.,க்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு

புதிய எம்.பி.,க்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் புதிய எம்.பி.க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்கப்படும் என லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், தேர்வாகும் எம்.பி.க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, லோக்சபாவுக்கு தேர்வாகும் புதிய எம்.பி.,க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல் புதிய எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகம் நோக்கி படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எம்.பி.,க்களை வரவேற்கும் வகையில் வரும் 9ம் தேதி வரை டில்லி ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சிறப்பு குழுக்களை அமைத்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதேபோல், பழைய எம்.பி.,க்கள், அரசு குடியிருப்புகளை காலி செய்ய குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கப்படும். எனவே, புதிய எம்.பி.,க்கள் தங்க, மாநில அரசுகளின் இல்லங்களில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தத்வமசி
ஜூன் 01, 2024 10:32

நன்று. ஆனால் பழம் பெருச்சாளிகளாக சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சில கட்சித் தலைவர்கள் இந்த இடங்கள் அவர்களுக்கு சொந்தம் போல அனைத்து மாறுதல்களையும் செய்து வசதியாக அமர்ந்து விடுகின்றனர். பிறகு காலி செய்வதில்லை. பிறகு நீதிமன்றம் மூலம் இவர்களை காலி செய்ய வேண்டியுள்ளது. சாம, தான், பேத, தண்டம் என்கிற நான்கு விதங்களையும் பயன்படுத்தி காலிசெய்ய வேண்டியுள்ளது. அப்புறம் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி, மோடி ஒழிக என்றெல்லாம் திட்ட வேண்டியது. இனி அவர்கள் காலி செய்யவில்லை என்றால் வாடகையும், வட்டியையும், இதற்கான சிலவுகளையும் சேர்த்து மொத்தமாக வசூல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த குடும்பத்தில் அவரும் அவரது உறவினர்கள் யாரும் எந்த உறுப்பினரும் எந்தவிதமான தேர்தலில் போட்டி போட அல்லது அரசு பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும்.


aa
ஜூன் 01, 2024 10:03

will go there


duruvasar
ஜூன் 01, 2024 10:01

எம் பிக்கள் இரயிலில் கூட பயணிப்பார்களா ? இது என்ன புது புரளி. தேவைப்பட்டால் டில்லி எம் பிகளே காரில் லக்னோ, சண்டிகார், அல்லது ஜெய்ப்பூர் சென்று அங்கிருந்து விமானத்தில் வருவதுதான் முறை. அவர்கள் மக்களின் பிரதிநிதிகள். மக்கள் சேவையை மகேசன் சேவையாக நினைத்து வாழ்வை அர்ப்பணித்த வர்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை