உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக வட்டி ஆசை காட்டி 600 பேரை ஏமாற்றியவர் கைது

அதிக வட்டி ஆசை காட்டி 600 பேரை ஏமாற்றியவர் கைது

சத்தர்பூர்:முதலீடு, அதிக வட்டி ஆசைகாட்டி 600க்கும் அதிகமானோரை ஏமாற்றிய வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.தினசரி முதலீடு, சேமிப்புக்கணக்கு துவங்குவோருக்கு அதிக வட்டி தருவதாக வசுந்தரா குழுமம், அனகயா நிதி நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் சந்தர் பிரகாஷ் சைனி, இயக்குனர் சுனிதா சைனி ஆகியோர் விளம்பரப்படுத்தி உள்ளனர்.இல்லாத ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெயரில் முதலீட்டாளர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த 667 பேரிடம் இருந்து 4.25 கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை வசூலித்து உள்ளனர்.திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு, இருவரும் தலைமறைவாகினர். புகாரின்பேரில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். கடந்த, 2022ல் சுனிதா சைனி கைது செய்யப்பட்டார். சந்தர் பிரகாஷை போலீசார் தேடி வந்தனர்.சத்தர்பூரில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியை சுற்றி வளைத்து, அவரை கைது செய்தனர். அவரை கைது செய்த போலீஸ் படைக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை