மேலும் செய்திகள்
தேசியம்
22 minutes ago
நீர்மூழ்கி கப்பலில் பயணித்து ஜனாதிபதி முர்மு சாதனை
23 minutes ago
சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
1 hour(s) ago
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
3 hour(s) ago | 5
லக்னோ: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்வாதி மாலிவால், 39, தற்போது அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.இவர் ஏற்கனவே டில்லி மகளிர் கமிஷனின் தலைவராக எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜனவரியில் எம்.பி., பதவி வழங்கப்பட்டது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வந்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க, கடந்த 14ம் தேதியன்று அவர் வீட்டிற்கு ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர் ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். பின், இருவரும் செய்தியாளர்களை சந்தித்த போது, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கெஜ்ரிவால் மவுனம் காத்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது:பாலியல் தொந்தரவுக்கு ஆளான எங்கள் மல்யுத்த வீராங்கனையர், டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மகளிர் கமிஷன் தலைவியான ஸ்வாதி, போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டார்.மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்திலும், கர்நாடகாவில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் கூறிய போதும், அமைதியாக இருந்த பா.ஜ., இப்போது கேள்வி எழுப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது. பிபவ் குமார் மீது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுப்பார். தயவு செய்து இந்த விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, நேற்று ஸ்வாதி வீட்டுக்கு சென்ற டில்லி போலீசார், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலை தாக்கிய உதவியாளர் பிபவ் குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கெஜ்ரிவால் அவரை பாதுகாப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையே, ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
22 minutes ago
23 minutes ago
1 hour(s) ago
3 hour(s) ago | 5