உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டல் உரிமையாளர்களின் விபரங்களை கேட்பதா?: உ.பி அரசின் உத்தரவுக்கு தடை விதிப்பு

ஹோட்டல் உரிமையாளர்களின் விபரங்களை கேட்பதா?: உ.பி அரசின் உத்தரவுக்கு தடை விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் பெயர் பலகையில், உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என, அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது, 'கன்வார்' யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரை, உ.பி., உத்தரகண்டில் ஆண்டுதோறும் நடக்கிறது. 'கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் பெயர் பலகையில், அதன் உரிமையாளர் பெயர் இடம் பெற வேண்டும்' என, உ.பி.,யின் முசாபர்பூர் போலீசார் சமீபத்தில் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை போலீசார் திரும்பப் பெற்றனர்.

உத்தரவு

இதையடுத்து, மாநிலத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் பெயர் பலகைகளில், அவற்றின் உரிமையாளர் பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள், கட்டாயம் இடம்பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது.

மனுத்தாக்கல்

பெயர்களை எழுதி வைத்திருக்க வேண்டும் என சொல்வதன் மூலம் மக்களை அரசை வேறுபடுத்துகிறது. இதன் மூலமாக சிறுபான்மையினரை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது எனக் கூறி உ.பி அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கன்வார் யாத்திரை நடைபெறும் பாதையில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களை கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

LOGANATHAN THAMBYIAH
ஜூலை 26, 2024 07:19

ஆமாம் உருவ வழிபாடு எதிர்ப்பீர்கள். ஆனால் எல்லாம் தீவிரவாத கேவல செயல் செய்யலாம் . முஸ்லிம் அல்லாதவர்களை ஏமாற்றலாம். இந்து பெயர் வைத்து ஹோட்டல் நடத்தி வியாபாரம் செய்யலாம். நல்ல மார்கம்.


P. Siresh
ஜூலை 22, 2024 22:07

இனி பா.ஜா.க.ஆளும் மாநில அரசுகள் அல்லது மத்திய அரசு ஒரு சட்டத்தை அமுள் படுத்துவதற்கு முன் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து ஸ்முள் படுத்த வேண்டும்.இப்படி எல்லா வற்றிலும் நீதி மன்றத்தில் கோட்டை விடும்படி இருக்க கூடாது.இது எதிர் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றதை போல பெறுது படுத்த பார்ப்பார்கள்


GMM
ஜூலை 22, 2024 20:39

ஓட்டல் நடத்த அரசு துறையிடம் உரிமம் பெற வேண்டும். விண்ணப்பத்தில் உரிமையாளர் பெயர் கட்டாயம். மேலும் அருகில் உள்ளவர்கள் அனுமதி தேவை என்கிறது சட்ட விதி? உரிமையாளர் பெயர், தற்போது போட்டோ, முகவரி, உரிமம் விவரம் அதிகாரிகள், வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும். உத்தரபிரதேச அரசு உத்தரவு சரி தான் என்று கூறி தான் கருத்து பதிவு.


Barakat Ali
ஜூலை 22, 2024 20:14

உருவ வழிபாட்டை வெறுப்போம் ..... ஆனால் உருவ வழிபாடு செய்பவர்களை நம்பிக்கைத் துரோகம் செய்து எங்களது பிசினஸை நடத்துவோம் ..... தட்டிக்கேட்டால் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கிறார்கள் என்று கூக்குரலிடுவோம் ....


Dharmavaan
ஜூலை 22, 2024 19:04

இதில் என்ன தவறு


GMM
ஜூலை 22, 2024 17:38

வீடு, கடை, பொது இடங்களில் தனியார் உரிமையாளர் பெயர் கட்டாயம். அரசு அலுவலக பெயர் கட்டாயம். மத சாயம் கூடாது. தேசம் முழுவதும் விரிவடையும் உத்தரவை விசாரிக்க தான் உச்ச நீதிமன்றம். மாநில, மாவட்ட, வார்டு அளவில் உள்ள விவாத மனுவை விசாரித்து, தன் தகுதியை குறைக்க வேண்டாம். போலீசார் உத்தரவு போட்டு ஏன் வாபஸ் பெற வேண்டும்? மாநில உத்தரவிற்கு ஏன் இடைக்கால தடை.? மத்திய அரசு நீதி விசாரணையில் உரிய பதில் கொடுக்காமல், ஏன் மௌன இருக்கிறது? இந்த நீதிமன்ற உத்தரவு அரசியல் தாக்கம் ஏற்படுத்தும். உச்ச நீதிமன்ற பணி எதிர்க்கட்சி பணியா? சட்ட பணியா?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 22, 2024 18:56

ஜி ம்ம் உன்னோட முழு பெயர் தெரியவில்லை, இந்த அறிவுரையை ஹிந்துக்களை ஏமாற்ற உண்மையான பெயரை மாற்றி ஹிந்து பெயரில் கடை வைத்து இருக்கும் பயங்கரவாத மத வியாபாரிகளிடம் சொல்லுங்கள். சாந்தி fancy store என்று கடை பெயர், உரிமையாளர் பெயர் அப்துல், அதேபோல் சங்கர் கபே ஆனால் உரிமையாளர் மொஹம்மத், இது தெரிந்த உள்ளூர் மக்கள் யாரும் ஹோட்டலுக்கு செல்லவில்லை. உணவில் எச்சில் துப்பும் காணொளிகளை அய்யா பார்த்தது இல்லை போலும்.


Nagarajan D
ஜூலை 22, 2024 17:34

எல்லா வணிக நிறுவனங்களும் ஹிந்துக்கள் பெயரில் உள்ளது ஆனால் gpay செய்ய ஸ்கேன் செய்தால் எல்லாம் இஸ்லாமியர்களின் பெயரில் உள்ளது....


தமிழ்வேள்
ஜூலை 22, 2024 17:27

உரிமையாளர் பெயர் தெரியாமல் இருந்தால்தான் பாகிஸ்தானி , பங்களாதேஷி கல்லா கட்ட முடியும் ...


sundarsvpr
ஜூலை 22, 2024 17:24

மாடி குடியிருப்பு இடங்களில் ஏன் பெயர்கள் குறிப்பிடுகிறார்கள். தேடுதல் நேரம் குறையும். நீதிமன்றம் தடை விதித்துஇருக்கவேண்டிய அவசியம் இல்லை.. வழக்கு விவாதம் நடத்தி நீதிமன்றம் உத்தரவு இட்டுஇருக்கவேண்டாம்.


venugopal s
ஜூலை 22, 2024 17:02

உத்தரப்பிரதேசத்தில் இப்போது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ