உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஷம் குடித்து தற்கொலை முயற்சி 

விஷம் குடித்து தற்கொலை முயற்சி 

சித்ரதுர்கா: கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.சித்ரதுர்கா ஹோசதுர்கா அருகே நாகரகட்டா கிராம பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் ராஜு, 45. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிலிருந்தபடி., மொபைல் போனில் ஒரு வீடியோ எடுத்தார்.'கிராம பஞ்சாயத்து தலைவி நாகரத்தினம்மாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தி எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். இதனால் தற்கொலை செய்ய உள்ளேன்,' என்று பேசினார்.இந்த வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹோசதுர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்