மேலும் செய்திகள்
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
3 hour(s) ago | 2
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் கட்
4 hour(s) ago
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
4 hour(s) ago
அமராவதி, ஆந்திர முதல்வராக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக நேற்றுபதவியேற்றார். நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், துணை முதல்வராக பதவியேற்றார். ஆந்திராவில் மொத்தமுள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும், மே 13ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ., ஆகியவை, 164 இடங்களில் வென்றன.இதில், தெலுங்கு தேசம் மட்டும் பெரும்பான்மையை தாண்டி, 135 தொகுதிகளையும்; ஜனசேனா, 21; பா.ஜ., எட்டு தொகுதிகளையும் கைப்பற்றின.காங்., தோல்விஆளுங்கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்., வெறும் 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், காங்., தோல்வி அடைந்தது.இந்நிலையில், அமராவதி மாவட்டத்தில் புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. அப்போது, ஆந்திர முதல்வராக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, கவர்னர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, ஆந்திர துணை முதல்வராக, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பதவியேற்றார். மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வுமான நர லோகேஷும் அமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து, 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., நடிகர்கள் ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆந்திர சட்டசபையின் பலத்தின்படி, அமைச்சரவையில் முதல்வர் உட்பட 26 அமைச்சர்கள் இருக்கலாம். தற்போது, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு, அமைச்சரவையில் மூன்று இடங்களும், பா.ஜ.,வுக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. கரகோஷம்முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில், எட்டு பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்; எஸ்.சி., சமூகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றுள்ளனர். மேலும், அமைச்சரவையில் மூன்று பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.ஆந்திர முதல்வராக பதவியேற்றதும், பிரதமர் மோடியிடம், சந்திரபாபு நாயுடு வாழ்த்து பெற்றார். அப்போது, அவரை ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்தினார்.தொடர்ந்து, பவன் கல்யாண் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியிடம் உரையாடிய பிரதமர் மோடி, இருவரது கைகளை பிடித்து மேலே உயர்த்தி வாழ்த்தினார். அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பின், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., நடிகர் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோருடனும் பிரதமர் மோடி சிறிது நேரம் பேசினார்.சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதவில், 'ஆந்திராவில் முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். இதற்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு, 'தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., அரசு, மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியை வழங்க பாடுபடும்' என்றார்.
சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட பதிவு: ஆந்திர முதல்வராக, நான்காவது முறை பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு என் வாழ்த்துகள். உங்களது தலைமை, ஆந்திரத்துக்கு வளத்தையும், நலத்தையும் கொண்டு வரட்டும். இரு மாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திரா - தமிழகம் இடையிலான நட்பையும், கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மோகன் மஜி பதவியேற்புஒடிசாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில், பா.ஜ., 78 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பா.ஜ.,வின் இந்த வெற்றி, பிஜு ஜனதா தளத்தின், 24 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டியது.இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குழு கூட்டத்தில், கட்சி சட்டசபை குழு தலைவராக, கியோஞ்சர் தொகுதி எம்.எல்.ஏ., மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டார். நான்கு முறை எம்.எல்.ஏ.,வான இவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.இந்நிலையில், புவனேஸ்வரில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், ஒடிசா முதல்வராக மோகன் சரண் மஜி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவரும், பட்நாகர் எம்.எல்.ஏ.,வுமான கே.வி.சிங் தியோ, நிமாபாரா தொகுதியில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிசாவில், பா.ஜ., ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறை.
பெமா காண்டு தேர்வுவடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், மொத்தமுள்ள 60 சட்டபை தொகுதி களில், 10ல் போட்டியின்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால், 50 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளில், 46 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், தலைநகர் இடா நகரில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குழு கூட்டம், அக்கட்சியின் மத்திய பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், தருண் சுக் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.இதில், பா.ஜ., சட்டசபை குழு தலைவராக, பெமா காண்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் வாயிலாக, அருணாச்சல் முதல்வராக அவர் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
3 hour(s) ago | 2
4 hour(s) ago
4 hour(s) ago