உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் மனுக்களை கையாளுவது குறித்து நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி

ஜாமின் மனுக்களை கையாளுவது குறித்து நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'ஜாமின் மனுக்களின் விசாரணையின் போது நீதிபதிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சந்திரசூட் பேசியதாவது: விசாரணை நீதிமன்றங்களில் ஜாமின் பெற வேண்டியவர்கள், அது கிடைக்காமல் போனால், அவர்கள் உயர் நீதிமன்றங்களை நாடுவார்கள். உயர் நீதிமன்றங்களில் ஜாமின் கிடைக்கவில்லை என்றால், இதன் விளைவாக, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த தாமதம் மனுதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை அதிகரிக்கிறது.ஜாமின் மனுக்களின் விசாரணையின் போது நீதிபதிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மையையும் அறிய பொது அறிவு தேவை. ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களையும் நீதிபதிகள் நன்கு ஆராய வேண்டும். எங்களுக்கு முன் வைக்கப்படும் மிகச்சிறிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாதது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kanns
ஜூலை 29, 2024 12:45

Sack & Punish Judges Not Punishing PowerMisusing Rulers, Stooge Officials police, judges, bureaucrats etc& Vested Fals Complainant Gangsters women, unions/groups, SCs, advocates etc


sankaranarayanan
ஜூலை 28, 2024 23:38

ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மையையும் அறிய பொது அறிவு இல்லாததால்தான் எல்லா வழக்குகளும் நேராக உச்சநீதி மன்றத்தையே நாட வேண்டியிட்டிருக்கிறது


RAJENDRAN M
ஜூலை 28, 2024 21:53

பொருள் விளக்க பொது அறிவுடன் வழங்கும் தீர்ப்புகள் தான்வழக்குகளை தீர்க்க உதவும்


RAJENDRAN M
ஜூலை 28, 2024 21:45

பொது,அறிவு என பொருள் உள்ளடக்கியது பொருள்விளக்கத்திறகுட்பட்ட தீர்ப்பு என எடுத்துக்காட்டும் நண்பர்களே.


Saai Sundharamurthy AVK
ஜூலை 28, 2024 20:30

இந்த நீதிபதிக்கு ஜார்ஜ் சோரஸ் கூட்டாளிகளுடன் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் உள்ளது.


Dharmavaan
ஜூலை 28, 2024 20:16

பொது அறிவு உச்ச நீதிக்கு இருக்கா ராஜிவ் கொலையாளிகளை தன தனிப்பட்ட அதிகாரத்தில் விடுவிக்க வேண்டிய கட்டாயம் என்ன அதுவும் மாநில அரசின் படி மத்திய அரசை அவமதிக்கும் செயல் .பொன்முடியின் தண்டனையை நிறுத்தியது என்ன பொது அறிவு.மற்றவர்க்கு புத்தி சொல்ல தான் அதன்படி நடக்க வேண்டும்


Sankar Ramu
ஜூலை 28, 2024 20:05

நீங்க ஒழுங்கா தீர்ப்பு கொடுத்தா ஏன் உச்சிநீதி மன்றம் வரனும்? பண பலம் உள்ளவர்கள் உங்கள் உச்சநீதி மன்ற வக்கில்களை வாங்கி தீர்ப்பையும் வாங்கிட முடியுது. வெட்கபடனும் நீங்க .


Narayanan
ஜூலை 28, 2024 19:52

பொது அறிவு எங்கே இருக்கு ?? பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் எப்படி ஜாமின் வழங்கியது ? கெஜ்ரிவாலுக்கு தேர்தலிபோது எப்படி ஜாமின் வழங்கியது . அறிவை வெளியில் அனுப்பிவிட்டார்கள் . சவுக்கு சங்கர் வழக்கும் அப்படித்தான் . பிறர் சொல்லும் அறிவுரைப்படிதான் தீர்ப்பு சொல்கிறீர்கள் . தேவை அற்ற கைது என்று தெரிந்தும் ஜாமின் வழங்க மறுக்கிறது . என்னோவோ போங்கள் மேடையேறி பேசும்போது ஆறுபோல பேச்சு கீழே இறங்கிபோகு ம்போது சொன்னதெல்லாம் போச்சு.


S. Narayanan
ஜூலை 28, 2024 19:51

பொண்முடிக்கு எதிராக அன்று சாட்சி கூறியவர்கள் எல்லோரும் இன்று பல்டி அடித்து விட்டார்கள். இதில் பொது அறிவு எப்படி கை கொடுக்கும். கை பணம் கொடுத்து பொது அறிவை வேலை செய்ய விடாமல் தடுத்து விடும்


Hari Prasad
ஜூலை 28, 2024 19:49

முதலில் நீதிபதிகள் எல்லாரும் lawyer notice பார்த்து தீர்ப்பு சொன்னால் நிறைய வழக்குகள் தேங்காது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ