மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
ராம்நகர் : பேக்கரியில் வேலை செய்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். உரிமையாளர் மீது கொலை குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.ஹாசன், பேலுார் ஹெப்பலு கிராமத்தை சேர்ந்தவர் நந்தன், 23. ராம்நகர் சாத்தனுாரில் மது என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் வேலை செய்தார்.நேற்று முன்தினம் இரவு, பேக்கரியில் தனியாக இருந்த நந்தன், வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினார்.கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், நந்தன் உயிருக்கு போராடுவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார்.நந்தனின் தலை, காலில் ரத்த காயங்கள் உள்ளது. பேக்கரி உரிமையாளர் மது அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமாக இருப்பதாக, நந்தன் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சாத்தனுார் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago