உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கையினுள் இருந்த மூங்கில் குச்சி 23 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்

கையினுள் இருந்த மூங்கில் குச்சி 23 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் அறவக்காட்டை சேர்ந்தவர் அய்யப்பன், 63; கூலி தொழிலாளி. இவர், 2001ல் வீட்டின் அருகே உள்ள மூங்கில் மரங்களை வெட்டி அகற்றிய போது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரது இரு கைகளிலும் ஏறிய மூங்கில் குச்சிகள் அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின், பாக்கு மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து, அய்யப்பனுக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பின், இயல்பு வாழ்கைக்கு திரும்பினார். இதனிடையே, அவரது வலது கையில் வலி ஏற்பட்டது.வலி காரணமாக, 15 நாட்களுக்கு முன், அருகிலுள்ள சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றார். பரிசோதித்த டாக்டர் வினோத், வலது முழங்கை அருகே ஒரு சென்டிமீட்டர் நீளம் கொண்ட மூங்கில் குச்சி இருப்பதை கண்டுபிடித்தார்.அதை அகற்றினால் தான் வலி குறையும் என கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்து மூங்கில் குச்சி அகற்றப்பட்டது. அய்யப்பன் கூறுகையில், ''அறுவை சிகிச்சையால் என், 23 ஆண்டு கால துயரத்துக்கு முடிவு கிடைத்துள்ளது. கைக்குள் மூங்கில் குச்சி இருப்பதை கண்டுபிடித்து அகற்றியதால், நிம்மதி கிடைத்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை