உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானம்: எதிர்ப்பை மீறி தொடர முடிவு

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானம்: எதிர்ப்பை மீறி தொடர முடிவு

மூணாறு: மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்தை தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தொடர அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் பெருகுடா பகுதியில் சிலந்தியாற்றின் குறுக்கே 'ஜலஜீவன் மிஷன்' குடிநீர் திட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆறு அமராவதி அணையின் நீர் ஆதாரமான பாம்பாற்றின் துணை ஆறு என்பதால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து போதிய அளவில் இன்றி திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் சாகுபடியும், 110 குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும் என தமிழகத்தில் தி.மு.க., தவிர பிற முக்கிய கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்புகளுடன் போர் கொடி உயர்த்தியுள்ளனர். இதனிடையே தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தடுப்பணை கட்ட மத்திய சுற்றுச்சூழல், தேசிய வன உயிரின வாரியம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவற்றிடம் கேரள அரசு முறையாக அனுமதி பெற்றுள்ளதா, இல்லாதபட்சத்தில் தடுப்பணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் வழக்கு விசாரணையை மே 24 க்கு ( இன்று) ஒத்தி வைத்து இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அதனை அறியாமல் தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தடுப்பணை கட்டுமானத்தை தொடரப் போவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அது தொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டவடை ஊராட்சி தலைவர் கணபதியம்மாள், துணைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. வட்டவடை பகுதி இந்திய கம்யூ., செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் குமாரசாமி, காங்., மண்டல தலைவர் சேதுராமன், பா.ஜ., சார்பில் பாண்டியன், ராமர், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழகத்தில் அரசியல் சுய லாபத்திற்காக சிலர் வட்டவடை மக்களின் குடிநீர் திட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். அதனை முறியடிக்கும் வகையில் போராட்டங்களும், தேவைப்பட்டால் 'பந்த்' உட்பட முழு அடைப்பும் நடத்தப்படும். அதேபோல் சட்டப்படி நடவடிக்கைக்கு நீதிமன்றத்தை அணுகவும், தடுப்பணை பிரச்னையில் கேரள அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்காததால் கட்டுமானம் தொடரவும் முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K B JANARTHANAN
மே 24, 2024 19:43

கேரள அரசுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் தெரியும். அதனால்தான், தடுப்பணை கட்டுகிறார்கள், ஆனால், தமிழக அரசு, தண்ணீர் பற்றி கவலைப்படுவதில்லை. மழைக்காலங்களில் மழைநீர் கடலுக்கு செல்கிறது. நீரைச் சேமிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


N Sasikumar Yadhav
மே 24, 2024 13:21

சிலந்தி ஆற்றில் கட்டப்படும் அணைக்கு தமிழகத்திலிருந்து கனிமவளங்களை கடத்திக் கொண்டு போவானுங்க தமிழின துரோகிகளான திருட்டு திமுக களவானிங்க


Kumar Kumzi
மே 24, 2024 12:13

என்னை தொட்டு பார் சீண்டி பார்னு வீர வசனத்தை காணோம்


rajen
மே 24, 2024 11:03

போராட்டம் நடுதுவோம் , தீர்மானம் நிறைவேற்றுவோம் இறுதியாக திறப்பு விழாவுக்கு செல்வோம் எங்கே போனான் து ராய் முருகன்


Sampath Kumar
மே 24, 2024 10:34

ஆக எந்த சட்டமும் மதிக்க படவில்லை ஆக ஓகோ பேஸ் பேஸ் கேரளா சாய் நான் ஆகிட்டு உண்டு சேட்டன்களின் திரு விளையாடல் ஆரம்பம் ஆனால் நம்ம தமிழ் நாடு பக்த கேடிகளுக்கு மலையாள சாமிகள் தான் பிடிக்கும் ஏன் என்றால் மலையாளி யை முதல்வர் ஆகி பார்த்த தமிழ் திருநாடு ஆயிற்றே அதுனால ....


Kumar Kumzi
மே 24, 2024 12:17

முரசொலி படிக்கிற கூமுட்டை கோவில் போவதற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்


Kavi
மே 24, 2024 07:22

Thiruthu drivdam only looting money in the name of ruled


sankaranarayanan
மே 24, 2024 06:18

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் நதிகள் மீது தடுப்பனைகள் கட்டப்பட்டு வருகின்றன இது இன்று நேற்று ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல காலம் காலமாக நடந்துகொண்டிருக்கின்றது என்று நன்றாக தெரிந்தும் தமிழக அரசோ அணை கட்டப்பட்டு ஒரு நிலைக்கு வந்த பிறகுதான் தக்க நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் இது ஒரு கண் துடைப்பு அண்டைநாட்டுக்காரன் என்ன செய்கிறான் என்றுகூட தெரியவில்லையா முளையிலேயே கிள்ளிவிடாமல் நன்றாக வளர்ந்தபின் பெயருக்காக ஒரு நடவடிக்கை அவ்வளவேதான்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி