உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்., மாநகராட்சி தேர்தல் ஏற்பாடு ஆய்வுக்கு கமிட்டி அமைத்த காங்.,

பெங்., மாநகராட்சி தேர்தல் ஏற்பாடு ஆய்வுக்கு கமிட்டி அமைத்த காங்.,

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் மேயர்கள் தலைமையில் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த 2020ல் நடக்க வேண்டிய பெங்களூரு மாநகராட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தாமல், பா.ஜ., காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அக்கட்சி பிரமுகர்களை ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. கவுன்சிலர் பதவி மீது ஆசை வைத்து, நான்கு ஆண்டுகளாக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்த கட்சி பிரமுகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

அரசிடம் அறிக்கை

பெங்களூரு மாநகராட்சியை, மூன்று அல்லது ஐந்தாக பிரிப்பது குறித்தும், வார்டு எண்ணிக்கையை உயர்த்துவது குறித்தும், இரண்டு நாட்களுக்கு முன், பி.எஸ்.பாட்டீல் தலைமையிலான கமிட்டி, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.இந்த அறிக்கை மீது, வரும் 15ம் தேதி நடக்க உள்ள கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், ஆலோசனை நடத்தி, முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.இதற்கிடையில், தேர்தல் நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் மேயர்கள் தலைமையில் காங்கிரசில் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்., கிழக்கு: முன்னாள் மேயர் ஹுச்சப்பா, முன்னாள் துணை மேயர் மஞ்சுளா நாயுடு, முன்னாள் ஆளுங்கட்சி தலைவர் ஜெயராம், முன்னாள் துணை மேயர் லட்சுமி நாராயணாபெங்., மேற்கு: முன்னாள் மேயர்கள் சம்பத்ராஜ், மும்தாஜ் பேகம், முன்னாள் ஆளுங்கட்சி தலைவர்கள் சத்யநாராயணா, சிவராஜ்பெங்., வடக்கு: முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், சாந்தகுமாரி, முன்னாள் ஆளுங்கட்சி தலைவர் உதய்சங்கர், முன்னாள் துணை மேயர் சீனிவாஸ்பெங்., தெற்கு: முன்னாள் மேயர்கள் ராமசந்திரப்பா, பத்மாவதி, முன்னாள் ஆளுங்கட்சி தலைவர்கள் சீனிவாஸ், அப்துல் வாஜித், முன்னாள் துணை மேயர் இந்திராபெங்., சென்ட்ரல்: முன்னாள் மேயர்கள் மஞ்சுநாத் ரெட்டி, வெங்கடேஷ் மூர்த்தி, முன்னாள் ஆளுங்கட்சி தலைவர்கள் ரிஸ்வான் நவாப், நாகராஜ்.இந்த கமிட்டிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கட்சி தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை, லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை