| ADDED : மே 07, 2024 11:26 PM
பெங்களூரு : பெங்களூரில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால், பல இடங்களில் மின்சார கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததில், பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டது.இதுதொடர்பாக பெஸ்காமின் '1912' உதவி எண்ணுக்கு பலரும் தொடர்பு கொண்டதால், உதவி எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.இந்நிலையில் பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:பெஸ்காமின் கீழ் எட்டு மாவட்டங்களில் உள்ள நுகர்வோருக்கு மழை காலங்களில் ஏற்படும் மின் பிரச்னைகளை விரைவாக தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸாப் எண் அறிவிக்கப்பட்டுள்ளன.வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரிகளுடன் செய்திகள், புகைப்படங்களை வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பலாம். மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94831 91212, 94831 91222 மற்றும் பெஸ்காம் பொது வாட்ஸாப் 94498 44640 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். எஸ்.எம்.எஸ்.,க்கு மட்டும், 94808 16119 என்ற எண்ணில் அனுப்பலாம்.இது தவிர, பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கென 11 மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.