உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேண்டவே வேண்டாம் சீனப்பொருட்கள்; முதலீடு மட்டும் போதும் என்கிறது நிடி ஆயோக்

வேண்டவே வேண்டாம் சீனப்பொருட்கள்; முதலீடு மட்டும் போதும் என்கிறது நிடி ஆயோக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல், அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்தது' என நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு, அரவிந்த் விர்மானி அளித்த பேட்டி: ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு நாம் சீனாவில் இருந்து தான் பொருட்களை இறக்குமதி செய்யும் சூழல் நிலவும் என தெரிகிறது. ஆனால், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல், அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்தது

அன்னிய நேரடி முதலீடு

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், சீனாவில் இருந்து அன்னிய நேரடி முதலீட்டை கோருவது நல்லது. இதனால் சீனாவில் இருந்து நாம் பொருட்களை இறக்குமதி செய்ய ஆகும் செலவு குறையும்.

ஏற்றுமதி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகிறது. இந்நேரத்தில் சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பொருட்களை உற்பத்தி செய்தால் நாம் பிற நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sethuraman
ஆக 06, 2024 15:36

தேவையில்லை,சீனா முதலீடு.இதனால் நமக்கு கெட்ட பெயர் தான் உண்டாகும்.


அப்பாவி
ஆக 05, 2024 16:43

சந்தை வாணாம். காசு குடு. ஆத்தா வெய்யும் காசு குடு.


selva raj
ஆக 05, 2024 15:45

China fraud country


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 14:45

சீனப்பொருட்கள் அனைத்துமே தரம் குறைந்தவை அல்ல ..... தவிர இறக்குமதி செய்யும் நாட்டின் மக்கள் விருப்பத்துக்குத் தகுந்தாற்போல தரம் இருக்கும் .....


Ramakrishnan R
ஆக 05, 2024 14:36

நிதி ஆயோக் உறுப்பினரின் கருத்து ஓரளவு உண்மைதான் 1970களின் ஆரம்பத்தில், சீனா பொருளாதாரத்தில் நமக்குச் சமமாகத்தான் இருந்தது. அதனிடம் பெரிதாக தொழில் நுட்பமும் கிடையாது. ஆனால் அந்நிய முதலீடு மற்றும் தொழில் நுட்பத்தை தன் நாட்டில் சுலபமாக அனுமதித்து பின்னர் தன்னையே வலிமைப்படுத்திக்கொண்டது. சீனாவுக்கு முன்னரே தென் கொரியாவும் இதே வழியில்தான் முன்னேறியது தற்போது நாமும் இந்த வழியைத்தான் பின்பற்றுகிறோம் அதனால் சீனாவின் முதலீட்டை அனுமதிப்பதில் தவறில்லை ஆனாலும் ஒரு சில துறைகளில் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும். சீனர்கள் அடிப்படையில் குள்ள நரிகள் பாதுகாப்பு, ஊடகம் மற்றும் உள்ளூர் தொழிலை பாதிக்கும் எந்த துறையிலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது


babu
ஆக 05, 2024 13:41

Duplicate, Duplicate என சீனாவை விமர்சனம் செய்த இந்தியர்களின் நிலை பாரீஸ் ஒலிப்பிக் போட்டி பதக்க பட்டியலில் பரிதாபமாய் இருக்கிறது. நல்ல விளையாடுபவர்களை தேர்வு செய்யமால் நம்மாளுக என்று தேர்வு கமிட்டிகள் கை நீட்டுவதால் தான் இந்த பரிதாப நிலை.


GMM
ஆக 05, 2024 13:34

சீனா தரம் சீனாவிற்கு மட்டும். இந்திய தர நிர்ணயம் BIS மற்றும் சர்வதேச தரம் இருக்க வேண்டும். Made in India என்று பொருளை வெளி அனுப்பும் முன் இந்திய தர கட்டுப்பாடு எண் இருக்க வேண்டும். முன்பு தர நிர்ணயம் வழங்க Indian Standard institution.


J.Isaac
ஆக 05, 2024 13:30

கொரனோ கூட்டாளியை பகைக்க முடியுமா ?


ஆரூர் ரங்
ஆக 05, 2024 13:10

அப்போ சீனர்கள் இங்கு முதலீடு செய்து சீனத் தரத்தில் MADE IN INDIA முத்திரையுடன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால் யாருடைய பெயர் கெடும்?. லட்சக்கணக்கான கோடி போட்டு டஜன் கணக்கில் ஐஐடி NITகளைக் கட்டியும் சொந்த பேடன்ட்ஸ் குறைவு. ஒரிஜினல் ஆராய்ச்சியை CAREER ஆக எடுக்கும் தைரியம் இளைஞர்களுக்கு இல்லை என்பதே காரணம்.


J.Isaac
ஆக 05, 2024 12:28

அன்பர் ஆரூர் எங்கே?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ