மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
பெங்களூரு : “பவானி வழக்கில் தலையிட மாட்டோம்,” என, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியும் பவானி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுபற்றி கருத்து சொல்ல மாட்டேன். பவானி வழக்கு சிறப்பு புலனாய்வு குழு மற்றும் நீதிமன்றம் சார்ந்த விஷயம். நாங்கள் தலையிட மாட்டோம்.பிரஜ்வல் வழக்கிலும் எங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது. வெளிநாட்டில் இருந்த அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி, தேவகவுடாவும், நானும் எச்சரித்தோம். இதனால் அவர் திரும்பி வந்தார்.வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம், ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது ஏன்? கர்நாடக பணத்தை பயன்படுத்தி, தெலுங்கானாவில் காங்கிரஸ் தேர்தல் நடத்துகிறதா?அனைத்து வாரியங்களிலும் முறைகேடு நடந்து உள்ளது. இதுபற்றி அரசு விசாரிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர, அவர் எடுத்த முயற்சி மகத்தானது.பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும். 'இண்டியா' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் என, கூட்டணி தலைவர்கள் கனவு காண்கின்றனர். அந்த கனவு விரைவில் கலைந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago