மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக மீட்பு
3 hour(s) ago | 1
எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அலுவலகத்தில், ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வலும் அவரது தாய் பவானியும் ஒரே கட்டடத்தில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிபுரா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது மனைவி பவானி. இவர்களின் மகன் பிரஜ்வல், 33. முன்னாள் எம்.பி.,ஹாசன் லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், ஓட்டுப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன்பு பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. பெண் கடத்தல்
இதனால், முதற்கட்ட ஓட்டுப் பதிவு முடிந்த மறுநாளான ஏப்ரல் 27ம் தேதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் ஜெர்மனியில் தலைமறைவானதாக தகவல் வெளியானது. உதவி கேட்டு வந்த பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்ததாக பிரஜ்வல் மீது வழக்குகள் பதிவாகின.இதற்கிடையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த, ரேவண்ணா வீட்டு வேலைக்காரப் பெண் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அவரை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.இந்த வழக்கில் ரேவண்ணாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அவர் கைதாகி, தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார். இதை தொடர்ந்து, அவரது மனைவி பவானிக்கும் நெருக்கடி உருவானது. அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.இதனால் அவர் நேற்று முன் தினம் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஆஜரானார்.அதே நேரத்தில் பிரஜ்வலிடமும் விசாரணை நடந்து வந்தது. ஒரே கட்டடத்தின் வேறு வேறு பகுதியில் இருந்தும் தாயும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:இது மிகவும் முக்கியமான வழக்கு. ஒவ்வொரு தகவலையும் நாங்கள் பாதுகாக்கிறோம். ஏப்ரல் 26ம் தேதி கடைசியாக மகனை, பவானி நேரில் பார்த்திருக்க வேண்டும். பெண்கள் படை
ஒரே கட்டடத்தில் இருந்தாலும் பிரஜ்வல் இப்போது விசாரணை கைதி. பவானி விசாரணை வட்டத்துக்குள் இருக்கிறார். எனவே இருவரையும் சட்டத்திற்கு உட்பட்டு கையாள்கிறோம். ஒருவரை ஒருவர் சந்திக்க சட்டம் அனுமதிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.பிரஜ்வலை அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்துப் பேசி, நேற்றுடன் 44 நாட்கள் ஆகின்றன. ஏப்ரல் 26ம் தேதி பிரஜ்வலை அவர்கள் பார்த்தனர். கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் அவரை எஸ்.ஐ.டி., பெண்கள் படையினர் கைது செய்தனர்.
3 hour(s) ago | 1