உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீதர் ராணுவ வீரர் சிக்கிமில் மரணம் 

பீதர் ராணுவ வீரர் சிக்கிமில் மரணம் 

சிக்கிமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, பீதர் ராணுவ வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.பீதர் மாவட்டம், கமலாநகர் தாலுகா கொரியா கிராமத்தை சேர்ந்தவர் அனில்குமார் உமாகாந்த் ராவ் நாவடே, 40; ராணுவ வீரர். கடந்த 2004ல் பணிக்கு சேர்ந்தார். ஜம்மு, ராஜஸ்தான், நாகாலாந்து, சிம்லா, மணிப்பூரில் பணியாற்றி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கிமில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.நேற்று காலை பணியில் இருந்த போது, அனில்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக ராணுவ வீரர்கள் அவரை மீட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்ததாக கூறினர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.அனில்குமார் உடல், இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். அனில்குமாருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ