உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறவைகள் சரணாலயம்: வனத்துறை திட்டம்

பறவைகள் சரணாலயம்: வனத்துறை திட்டம்

பெங்களூரு: கர்நாடகாவின் இரண்டு இடங்களில் பறவைகள் சரணாலயம் உருவாக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, வனத்துறை வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவில் ஒன்பது மிருகக்காட்சி சாலைகள் உள்ளன. இவற்றில் சிறார்களுக்காக திறக்கப்பட்ட நான்கு சிறிய மிருகக்காட்சி சாலைகளும் அடங்கும். இங்கு யானை, புலி, சிங்கம், சிறுத்தை உட்பட பல்வேறு விலங்குகளுடன் விதவிதமான பறவைகளும் உள்ளன. கூண்டுகளில் பறவைகள் அடைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின், வேலுார் மாவட்டத்தின் ஏலகிரி போன்று, கர்நாடகாவில் பெங்களூரு, பீதரில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும். பெங்களூரின் கொத்தனுாரில் பறவைகள் சரணாலயத்துக்கு வனப்பகுதி நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்குள்ள நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பு, சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது.மொத்தம் 17 ஏக்கர் நிலத்தை வனத்துறை பெற்றுள்ளது. இதில் 2.25 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் அமைக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது. பீதரில் மூன்று முதல், நான்கு ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க ஆலோசிக்கிறோம்.வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, கடந்த வாரம் தமிழகம் வேலுார் மாவட்டத்தின் ஏலகிரியில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்று, அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். அங்கு பலவித மான உள்நாட்டு, வெளிநாடுகளின் பறவைகள் உள்ளன. அவைகளை தொட்டு ரசிக்க, தீவனம் கொடுக்க அனுமதி உள்ளது.அதேபோன்று கர்நாடகாவிலும் பறவைகள் சரணாலயம் அமைப்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை