| ADDED : ஏப் 12, 2024 05:29 AM
பீதர்: ''ஈஸ்வரப்பா யார்? அவர் யார் என்பதே எனக்கு தெரியாது,'' என மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் தெரிவித்தார்.பீதரில் நேற்று அவர் கூறியதாவது:ஈஸ்வரப்பா யார் என்றே எனக்கு தெரியாது. பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோவை அவர் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்; இது நல்ல விஷயம்தான்.காங்கிரசாரே மோடியின் போட்டோவை பயன்படுத்துகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினரும் பயன்படுத்துகின்றனர். ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்து, தவறு செய்ய கூடாது. தன் தவறை திருத்தி கொள்ளலாம். இது அவரது முன்னேற்றத்துக்கு, பா.ஜ., அளிக்கும் வாய்ப்பு.பீதர் வேட்பாளர் பகவந்த் கூபாவுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் பிரபு சவுஹான் பிரசாரம் செய்கிறார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.விரைவில் குணமடைந்து, பிரசாரத்துக்கு வர தயாராக இருக்கிறார். ஆனால் நாங்கள்தான், ஓய்வெடுக்கும்படி கூறியுள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.