உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா முடிவு நிராகரித்த பா.ஜ., தலைவர்கள்

தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா முடிவு நிராகரித்த பா.ஜ., தலைவர்கள்

மும்பை : மஹாராஷ்டிராவில் உள்ள 48 லோக்சபா தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., கூட்டணி 17 இடங்களை கைப்பற்றிய நிலையில், அக்கட்சி ஒன்பது இடங்களை மட்டுமே பெற்றது. அதிருப்தி வேட்பாளர் உட்பட 31 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது.

அனைவருமே பொறுப்பு

இந்த முடிவு, மஹாராஷ்டிராவை பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பா.ஜ., தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்திருந்தார். கட்சிப் பணியில் கவனம் செலுத்தும் வகையில், ஆட்சிப் பணியில் இருந்து விடுவிக்க கட்சி தலைமைக்கு அவர் கோரிக்கையும் விடுத்தார். பட்னவிசின் விருப்பத்தை நிராகரித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 'தோல்விக்கு அனைவருமே பொறுப்பு, இந்த விவகாரத்தில் அவருடன் பேசுகிறேன்' என தெரிவித்தார். இந்நிலையில் டில்லி சென்ற தேவேந்திர பட்னவிஸ், பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று பேசினார். அப்போது, “மஹாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. ராஜ் தாக்கரேயின் ஆதரவை பெற்றது, சரத் பவார் கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் கட்சேயின் ஆதரவை பெற்றது, பா.ஜ., செயலர் வினோத் தாவ்டே அடிக்கடி வேட்பாளர்களை மாற்றியது போன்றவை தோல்விக்கான காரணம்.

கூடுதல் அதிகாரம்

''சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள எனக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்,” என, பட்னவிஸ் வலியுறுத்தினார். இதை, அமித் ஷா நிராகரித்தார்.இதற்கிடையே, தேவேந்திர பட்னவிசை சந்தித்த பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், 'சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில் ராஜினாமா செய்தால், அது எதிர்மறையான விளைவுகளை தரும். எனவே, சட்டசபை தேர்தல் வரை துணை முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்' என, வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 12:34

விரைவில் வரப் போகும் சட்டசபைத் தேர்தலில் தனியாக நிற்க வேண்டும். கூட்டணி நிலைக்காது .


Vijay D Ratnam
ஜூன் 07, 2024 23:08

மராட்டிய மண்ணின் மைந்தரான, மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 2029 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படலாம். ஆர்எஸ்எஸ் பூரண ஆசி பெற்றவர். மோடி, ராஜ்நாத்சிங் அமித்ஷாவின் செல்லப்பிள்ளை. நம்மூர் தற்குறி மாதிரி துண்டு சீட்டு கிடையாது. தேவேந்திர ஃபட்னாவிஸ் நம்ம ஃப்யூஸ் கோயல் மாதிரி சிறந்த படிப்பாளி, திறமைசாலி. செயல்திறன் மிக்க மனிதர். நாக்பூர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர், தொடர்ந்து நாக்பூர் பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ பிஸ்னஸ் மேனேஜ்மேண்ட் படித்தவர். அதை தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் புகழ்பெற்ற DSE-German Foundation for International Development ல் மெத்தெர்டஸ் அண்ட் டெக்னிக்ஸ் ஆஃப் ப்ராஜெக்ட் மேனேஜ்மேண்ட்டில் Ph.D, பெற்றவர். இப்படி ஒருவர் பிரதமர் நாற்காலியில் அமரும் போது நரேந்திர மோடி ஜனாதிபதியாக இருந்தால் இந்தியா என்றாலே உலகம் ச்சும்மா அதிரும்ல.


Anantharaman Srinivasan
ஜூன் 08, 2024 00:23

இதை அப்படியே மோடிக்கும் அமித்ஷாக்கும் Reg.post எழுதி அனுப்பு. பதில் தருவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை