உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணை ஏமாற்றிய பா.ஜ., செயலர் கைது

பெண்ணை ஏமாற்றிய பா.ஜ., செயலர் கைது

ஷிவமொகா : திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றியதாக, மாவட்ட பா.ஜ., யுவ மோர்ச்சா செயலர் கைது செய்யப்பட்டார்.ஷிவமொகா மாவட்டம், சாகரை சேர்ந்தவர் அருண் குக்வே. மாவட்ட பா.ஜ., யுவ மோர்ச்சா செயலராக உள்ளார். இவர், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, நெருங்கி பழகி உள்ளார்.திடீரென, இரண்டு மாதங்களுக்கு முன், இளம் பெண்ணுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். பலமுறை இவருக்கு இளம்பெண் போன் செய்தும் எடுக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஷிவமொகா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று காலை, அருண் குக்வேவை கைது செய்து, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி