மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
புதுடில்லி :லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் கைவிட்ட நிலையில், தபால் ஓட்டுகளால் இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்ற சம்பவம் அரங்கேறிஉள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ரயில்வே, கப்பல், விமான பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் ஆகியோர் தபால் ஓட்டுகள் செலுத்தினர். ஓட்டு எண்ணிக்கை நடந்த கடந்த 4ம் தேதி, இந்த தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, தபால் ஓட்டு களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டன.இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் பின்தங்கியிருந்த இரு வேட்பாளர்கள், தபால் ஓட்டுகள் வாயிலாக வெற்றியை ருசித்தனர். மஹாராஷ்டிராவின் மும்பை வடமேற்கு சிவசேனா கட்சி சார்பில் ரவீந்திர தத்தாராம் வைக்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் அமோல் கஜனன் கீர்த்திகர் போட்டியிட்டார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில், ரவீந்திர தத்தாராம் 4,51,094 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அமோல் கஜனன் முன்னிலையில் இருந்தார். இதையடுத்து, தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில், ரவீந்தருக்கு 1,550 ஓட்டுகளும், அமோலுக்கு 1,501 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து, 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் ரவீந்திர தத்தாராம் வெற்றி பெற்றார். இதேபோல், ஒடிசாவின் ஜஜ்பூர் தொகுதியில், பிஜு ஜனதா தள வேட்பாளர் சர்மிஷ்தா சேதி முன்னிலையில் இருந்த நிலையில், தபால் ஓட்டுகளின் வாயிலாக 1,587 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளர் ரபீந்திர நாராயண பெஹரா வெற்றி பெற்றார்.
8 hour(s) ago | 2
8 hour(s) ago