உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா சட்டசபைக்கு முஸ்லீம் பெண் எம்.எல்,ஏ, முதன்முறை தேர்வு

ஒடிசா சட்டசபைக்கு முஸ்லீம் பெண் எம்.எல்,ஏ, முதன்முறை தேர்வு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோன்று காங்., சார்பில் முஸ்லீம் பெண் எம்.எல்.ஏ., ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்றுள்ளார்.நடந்து முடிந்த ஒடிசா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு 147 க்கு 78 இடங்கள் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.அதே நேரத்தில் சட்டசபைக்கு முதன் முறையாக முஸ்லீம் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஒடிசாவின் பாராபதி கட்டாக் தொகுதி வேட்பாளராக காங்., கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டவர் சோபியா பிர்தவுஸ். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 32 வயது இளம் எம்.எல்.ஏ.வான சோபியா பிர்தவுஸ் அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை ஒடிசா காங்., கட்சியின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார்சோபியா பிர்தவுஸ் கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் இன்டஸ்டிரியல் டெக்னாலஜிபடிப்பை முடித்து பெங்களூவில் ஐ.ஐ.எம் படிப்பையும் முடித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டில் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரிடாய்) புவனேஸ்வர் பரிவின் பெண்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கிரிடாய் மகளிர் பிரிவின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இந்திய பசுமை கட்டட குழுவின் புவேனேஸ் பிரிவின் இணை தலைவராகவும் இருந்து வருகிறார்.கடந்த 1972-ம் ஆண்டில் முதன் பெண் முதல்வரான நந்தினி சத்பதி போட்டியிட்ட இதே தொகுதியில் தற்போது சோபியா பிர்தவுஸ் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Alagusundram KULASEKARAN
ஜூன் 09, 2024 15:38

வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் முதன் முதலில் ஒடிசா சட்டமன்றத்துக்கு அடியெடுத்து வைக்கும் உங்கள் அரசியல் வாழ்க்கை சேவை மனப்பான்மை வெற்றி பெற்று மக்கள் சந்தோஷம் அடையவேண்டும்


Prabahara Lingan
ஜூன் 09, 2024 15:36

வாழ்த்துக்கள்


Mohamed Yousuff
ஜூன் 09, 2024 15:00

Congratulations


Mohamed Yousuff
ஜூன் 09, 2024 14:58

காங்கிரதுலேஷன்ஸ்.


Omerkaiyumsultan
ஜூன் 09, 2024 12:01

எல்லாப்புகழும் இறைவனுக்கே


Omerkaiyumsultan
ஜூன் 09, 2024 12:00

வாழ்த்துக்கள்


Jai
ஜூன் 09, 2024 11:34

சோபியா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். IIMல் MBA முடித்தவர் திறமையானவராக இருக்க வேண்டும். மிகக்குறைந்த சீட்டுகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியாக இருந்தால் கூட தாங்கள் தங்கள் படிப்பு அனுபவத்தை பயன்படுத்தி சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும். உங்களைப் போல் திறமை உள்ள வாய்ப்பு கிடைக்காத முஸ்லிம் சகோதரிகளுக்கு ஆதரவு கொடுத்து உங்களைப் போலவே அவர்கள் படிப்பிலும் அரசியலிலும் முன்னேற நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். கட்சி பேரம் இல்லாமல் திறமையான வர்களுக்கு மக்கள் ஓட்டு போட்டால் நாட்டிற்கும் நல்லது நடக்கும். இவரை விடவும் படித்த அனுபவம் பெற்ற வேட்பாளர் தமிழ்நாட்டில் அண்ணாமலை அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம்.


sri
ஜூன் 08, 2024 22:38

congrats mam


பெரிய ராசு
ஜூன் 08, 2024 21:38

முக்காடு போடலய ..செய்ஞ்சுற போறாங்க


Ramesh Sargam
ஜூன் 08, 2024 20:40

வாழ்த்துக்கள். கிடைத்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்துங்கள். Avoid dirty politics.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை