உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., மகளிர் அணி பொது செயலர் தற்கொலை

பா.ஜ., மகளிர் அணி பொது செயலர் தற்கொலை

மத்திகெரே; கர்நாடக பா.ஜ., மகளிர் அணி பொதுச் செயலராக இருந்தவர் மஞ்சுளா, 42. பெங்களூரு மத்திகெரேயில் வசித்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.'நீங்கள் வாழ்க்கையில் உங்களுக்காக பெயரை உருவாக்கி பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அமைதி வேண்டும். எனக்கு மனநிம்மதி இல்லை. என் தற்கொலைக்கு நானே காரணம்' என, மஞ்சுளா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை யஷ்வந்த்பூர் போலீசார் கைப்பற்றினர்.சில மாதங்களுக்கு முன்பு, மஞ்சுளாவின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கணவரை இழந்த பின், மனரீதியாக மஞ்சுளா பாதிக்கப்பட்டார். அரசியல் நிகழ்ச்சிகளிலும் இருந்து விலகி இருந்தார் என்று, கட்சி தொண்டர்கள் கூறினர். பல ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்த மஞ்சுளா, படிப்படியாக உயர்ந்து மகளிர் அணி பொதுச் செயலர் ஆனது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி