உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒற்றை இலக்கத்தை பா.ஜ., தாண்டாது

ஒற்றை இலக்கத்தை பா.ஜ., தாண்டாது

பீதர், : ''லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் ஒற்றை இலக்க எண்ணை பா.ஜ., தாண்டாது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் இம்முறை இளைஞர்கள், பெண்களுக்கு சீட் வழங்கி உள்ளது. 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், கர்நாடகாவில் ஒற்றை இலக்கத்தை பா.ஜ., தாண்டாது.கடந்த 11 மாதங்களில், மாநில அரசு சொன்னது போல் நடந்து கொண்டது. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருவர்.ஏழு மாதங்களாக வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடவும் இல்லை. மாநிலத்தை சேர்ந்த 26 பா.ஜ., - எம்.பி.,க்கள், வறட்சி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் மட்டுமே லோக்சபாவில் குரல் எழுப்பினார்.மத்திய அரசு, மாநில அரசுக்கு இழைக்கும் அநீதி பற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும். இத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவர்.நமது நிலம், நீர், மொழிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், மாநில எம்.பி.,க்கள் பேச வேண்டும். ஆனால், ஒரு பா.ஜ., - எம்.பி., கூட பேசவில்லை. இம்முறை அவர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்வர்; புதிய எம்.பி.,க்கள் லோக்சபாவுக்குள் நுழைவர்.கடந்த பத்து ஆண்டுகளாக மோடி அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட இல்லை. புல்லட் ரயில் ஓடவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள், துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சாரம் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது.இதுவரை நாட்டின் அனைத்து பிரதமர்கள் ஆட்சி காலத்தில் 54 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். மோடி மட்டும் 130 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கியதை தவிர, அவரது சாதனை வேறு எதுவும் இல்லை.முந்தைய பா.ஜ., ஆட்சியில் மாநிலத்தில் புதிதாக ஒரு பஸ் கூட வாங்கவில்லை. காங்கிரஸ் அரசு வந்த பின், 5,800 பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. இன்னும் பஸ்கள் வாங்கப்படும். இத்துறையில் ஆண்டுதோறும் 10,000 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்னர். அவ்வப்போது ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும். இதை பா.ஜ., செய்யவில்லை. தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vadivelu
மே 07, 2024 16:29

இத்தனை பட்டு வாங்க காசு எது? காசே கொடுக்கறதில்லை என்கிறீர்கள் அவிங்க வாங்க விடலை நாற்பது பெர்சென்ட் என்று சொல்லி ஒரே கூச்சல், நீங்க மட்டும் எப்படி வாங்கினீங்க அவிங்க மானிலத்திற்கு தேவை என்று போராட்டம் செய்யலை


J.V. Iyer
மே 07, 2024 04:11

கழிவுகள் மற்ற வழியாக எல்லோருக்கும் வெளியேறும் ஒருசிலருக்கு வாய்வழியாகவும் தலையில் ஒன்றும் இல்லாமல் வாயை வாடகைக்கு விட்டால் இப்படித்தான்


GANESUN
மே 06, 2024 14:44

ரொம்ப சந்தோஷம், கர்நாடகால மட்டுமா இல்ல ஆல் இந்தியா வரைக்குமா உங்க ஜோசியம் ?


மேலும் செய்திகள்