உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் சுரேஷ் கோபி வெற்றிக்கு காங்., தான் காரணம்: மார்க்.கம்யூ.,

பா.ஜ.,வின் சுரேஷ் கோபி வெற்றிக்கு காங்., தான் காரணம்: மார்க்.கம்யூ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்,: “திருச்சூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு, காங்கிரசே காரணம்,” என, மார்க். கம்யூ., மாநில செயலர் வி.எம்.கோவிந்தன் குற்றஞ்சாட்டினார்.கேரளாவில், மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 18; ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளரும், நடிகருமான சுரேஷ்கோபி, 74,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் வாயிலாக, கேரளாவில் தன் முதல் வெற்றிக் கணக்கை பா.ஜ., துவங்கி உள்ளது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், இடது ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் நேற்று, தேர்தல் முடிவுகள் குறித்து, கேரள மார்க். கம்யூ., கட்சி யின் மாநில செயலர் வி.எம்.கோவிந்தன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி, 1 சதவீத ஓட்டு களையே இழந்துள்ளது. அதே சமயம், ஐக்கிய ஜனநாயக முன்னணி 5 சதவீத ஓட்டுகளை இழந்துள்ளது. திருச்சூர் தொகுதியை பொறுத்தவரை, 80,000 ஓட்டுகளை காங்., இழந்ததால், பா.ஜ., வெற்றி பெற்று விட்டது.இத்தொகுதியில், 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது, எங்களுக்கு கூடுதலாக 6,000 ஓட்டுகள் கிடைத்துள்ளன. காங்கிரசின் ஓட்டுகள் குறைந்தது தான், சுரேஷ்கோபி வெற்றிக்கு காரணம்.கடந்த லோக்சபா தேர்தலிலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். எனினும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் நாங்கள் அபார வெற்றி பெற் றோம். தற்போதைய தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் வலுவாக வருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 06, 2024 10:21

பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணம் அப்போது கம்யூனிஸ்ட் தோல்விக்கும் காங்கிரஸ் காரணமா இல்லை பாஜகவா.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2024 07:43

நீங்கள்.... கான் கிராஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கியது தான்.... உங்களின் தோல்விக்கு காரணம்.... அதை மறைத்து விட்டு... அடுத்தவர் மேல் குற்றம் சாட்ட கூடாது.


ஆரூர் ரங்
ஜூன் 06, 2024 07:10

லவ் ஜிஹாதி களுக்கு பயந்து கிறிஸ்தவ மக்களும் பிஜெபி யை ஆதரித்தது முக்கிய காரணம் என்கிறார்கள். (நேரில் சென்று அவர்களே கூற கேட்டறிந்தேன்)


Kasimani Baskaran
ஜூன் 06, 2024 06:24

சுதந்திரம் வாங்க காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்வது போல இதுவும். பல காலணி நாடுகளுக்கு கேட்காமலேயே கூட 1947ல் கிடைத்தது என்பது கூட பலருக்கு தெரியாது.


K.Muthuraj
ஜூன் 06, 2024 08:43

உண்மை இது தான். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், முக்கியமாய் விக்டோரியா மஹாராணி போன்றோர், தங்கள் ஆட்சிக்குட்பட்ட மற்ற நாடுகளுக்கு செல்லும் தனது நிர்வாக அதிகாரிகளிடம் அந்தந்த நாடுகளுக்கு ஆட்சி நிர்வாக வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து விட்டு விரைவில் விலகிக்கொள்ள வேண்டும், தங்கள் நாட்டிற்கு வந்து விட வேண்டும் என்பதே.


K.Muthuraj
ஜூன் 06, 2024 08:53

இதில் சோகம் என்னவென்றால் இந்தியாவில் தான் நிர்வாக வழிமுறைகளை அரசியல் அமைப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்டவர்கள் மிகவும் சொற்பம். இந்தியாவை கைகழுவுவதற்கு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அதுவே நீண்ட நாட்கள் பிடிக்க வைத்தது.


Vasudevan
ஜூன் 06, 2024 02:02

உங்களுக்கு மம்தா பாட்டிக்கு வெட்கமே இல்லை. மாநிலத்தில் எதிரி. லோக் சபாவுக்கு நண்பன். இப்படி 28 பேர் 1 மாவீரனை எதிர்த்து நின்றும், பிஜேபி மொத்தமா ஜெயிச்சி வந்த எண்ணிக்கையை தாண்டலே. பிஜேபி ஒரு MP ஜெயித்தது மிகவும் பெரிய சாதனை சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில். Telengana ஆந்திரா எல்லாம் பிஜேபி காலுன்றி விட்டது. தமிழ்நாட்டில் ஓட்டு சதவிகிதம் கூடி விட்டது. தமிழ்நாட்டிலும் தாமரை மலரும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி